பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

புறநானூறு - மூலமும் உரையும்



அன்னச் சேவல் அன்னச் சேவல் ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல், நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக், கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையல் மாலை யாம் கையறுபு இணையக், 5

குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழநன் னாட்டுப் படினே, கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கு, எம் 10

பெருங்கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர் ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத், தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே -

அன்னச் சேவலே போர் வெல்லும் பெருமித உணர்வோடு நாடு காக்கும் நல்லோனின் முகம்போல், முழுநிலா ஒளிவிடும் இம் மாலைக் காலத்திலே, நண்பனிடம் செல்ல இயலாது செயலற்று யான் வருந்துகின்றேன். நீயோ, குமரிப் பெருந் துறையின் அயிரைமீனை உண்டு வடமலையை நோக்கிச் செல்லுகிறாய். இடைவழியில் சோழ நாட்டு உறையூருக்குச் சென்றால், அங்கே உயிர் மாடத்தினிடத்தே நின் பேடையுடன் தங்குவாயாக. தங்கிச் சோழனின் அரண்மனையினுள் புகுந்து, அவன் கேட்குமாறு, 'பெரிய பிசிர் என்ற ஊரிலுள்ள ஆந்தையின் அடியவன்' என்று நின்னைப் பற்றிக் கூறுவாயாக. அவ்வாறு நீ சொன்னால், நின் பேடைக்குத் தன்னுடைய அன்பின் சின்னமாக, நல்ல பல அணிகலன்களை அவன் வழங்குவான்! (நட்பின் செறிவால் கூறியது இது) - -

சொற்பொருள்: 5 மையல் மாலை - பிரிந்திருக்குங்கால் மயக்கத்தை யுண்டாக்கும் மாலைக்காலம். 6. அயிரை ஒருவகை மீன். 9. குறும்பறை அசைஇ - குறுகப் பறத்தலுடனே சென்றனை யாகி. 12. ஆந்தை ஆந்தையார் (பிசிர் ஆந்தையார்). ‘அடியுறை' என்பதற்கு, ஆந்தையின் அடிக்கண் உறைவான் என்றுரைப்பாரு முளர்.

68. மறவரும் மறக்களிறும்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை