பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

புறநானூறு - மூலமும் உரையும்


செல்க, சென்றால், பிறர் வாயிலைப் பற்றியே நினையாதவாறு நின் குறைதீர அவன் நினக்கு வழங்குவான்.

சொற்பொருள்: 3. சில்செவித்து ஆகிய கேள்வி - கேட்டார் பலரும் அதன் நுட்பத்தன்மை அறிதற்கரியதாய், அறிவார் சிலரேயாதலின் அவர் செவிக்கண்ணதாகிய யாழை; கேள்வி - யாழ். 5. செம்பொறி - மார்பிடையுள்ள மூன்று கோடுகள். 'வரையகன் மார்பிடை வரையும் மூன்றுள” (சீவகசிந்தாமணி, செ. 1462). திருமகள் எனினும் அமையும். இலிற்றுதல் சுரத்தல். 11. புட்புகை - புள் செய்யும் பகை, காரி செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தலைப் பகை' என்றனர்.

69. காலமும் வேண்டாம் !

பாடியவர்: ஆலந்துர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை

(பாணனைச் செல்க என ஆற்றுப்படுத்தலின் பாணாற்றுப் படை ஆயிற்று. 'பசும்பூட் கிள்ளி' என வந்த இவன் பெயரைக் காண்க. (16-17)

கையது, கடன்நிறை யாழே; மெய்யது, புரவலர் இன்மையின் பசியே; அரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி உடுத்த உயவற் பாண! பூட்கை இல்லோன் யாக்கை போலப் 5

பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை; வையகம் முழுதுடன் வளைஇப் பையென என்னை வினவுதி ஆயின், மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக் குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப், 10

புலாக் களம் செய்த கலாஅத் தானையன் பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே! பொருநர்க்கு ஒக்கிய வேலன், ஒரு நிலைப் பகைப் புலம் படர்தலும் உரியன், தகைத் தார் ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் 5 கிள்ளிவளவற் படர்குவை ஆயின் நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும் பகல் தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,