பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

95


மடங்கலின் சினை.இ, மடங்கா உள்ளத்து, அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னோடு பொருதும் என்ப; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த 5 பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத், திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக, மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் 10

பொய்யா யாணர் மையற் கோமான்

மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்

அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,

வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும், கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த 15

இன்களி மகிழ்நகை இழுக்கி, யான் ஒன்றோ, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

'சிங்கம்போலச் சீறிவரும் அடங்காத உள்ளமுடைய பகைவரை அவர் அழியவென்று புறங்காண்பேன். காணேனாயின், என் தேவியான இவளைப் பிரிவேனாகுக. அறமன்றிலே கொடியோனை நியமித்து முறைகலங்கச் செய்த கொடுங்கோல னாகுக! மாவனும், ஆந்தையும், அந்துவஞ் சாத்தனும், ஆதனழிசியும், இயக்கனும், இன்னும் பிறருமாகிய என் கண்ணைப் போன்ற நண்பரின் புன்சிரிப்பை இழந்தவனாகுக. பாண்டியர் குடியில் நீங்கி வன்புலங் காவல் கொண்ட குடியிற் சென்று பிறப்பேனாகுக” (இச் சூளுரையால், மனைவியைப் பிரிவதும், அறந்தவறுவதும், அரிய நண்பரை இழப்பதும், நன்னாட்டு அரச மரபிற் பிறவாமையும் பழி என்பதனை உணர்க.)

சொற்பொருள்: 2. உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக்கூடி. 6. இவள் என்றது மனைவியை 9. மெலிகோல் - கொடுங்கோல். 'ஆகுக' என்பது எங்கும் தந்துரைக்கப்பட்டது.1மையல் - மையல் என்னும் ஊர். 16. இழுக்கி - தப்பியவனாகி ஒன்றோ - எண்ணின் கண் வரும் இடைச் சொல், அதனை முன்னும் பின்னும் கூட்டுக. 19. பிறக்கு - பிறப்பேனாகுக: 'செய்கு’ என்னும் வாய்ப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று.