பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

புறநானூறு - மூலமும் உரையும்


10. நீள் முளை - மூங்கிலினது நீண்ட முளை.14 ஒல்லா முயக்கிடை - பொருந்தாத புணர்ச்சியிடை குழைக - துவள்வதாக ‘உள்ளம்' என்றது, உள்ளத்தால் சூழும் சூழ்ச்சியை.

74. வேந்தனின் உள்ளம் !

பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை. திணை: பொதுவியல். துறை: முதுமொழிக் காஞ்சி. தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் (புறத். சூ.19)

('சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற்கிடந்து, தண்ணீர் கேட்டுப் பெறாது, பின் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணாது சொல்லித் துஞ்சிய பாட்டு இது' என்பது பழைய குறிப்பு. 'அரசர்க்கு மானத்தினும் மிக்க உறுதிப் பொருளில்லை’ என்று கூறினமையின், முதுமொழிக் காஞ்சி ஆயிற்று) R

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,

'ஆஅள் அன்று' என்று வாளின் தப்பார்;

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், . 5

மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்

தாம்இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ, இவ் உலகத் தானே.

மன்னர் குடியிலே குழந்தை இறந்து பிறந்தாலும், தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றை வாளால் வெட்டியே புதைப்பர். பகைவர் வாளால் சாவாது போயினேன்! சங்கிலியி னாலே கட்டிவைத்து, நாய்போலத் துன்புறுத்தி என்னைச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உபகாரத்தால் வந்த தண்ணிரை, இரந்து உண்ணேம் என்ற மன வலியின்றி, வேட்கை தாளாது, என்னைப் போலத் தாமே இரந்து உண்பவரையும் இவ்வுலகில் அரசர் எனப் போற்றிக் கொள்வார்களோ? -

சொற்பொருள்: 1. ஊன்தடி - தசைத்தடியாகிய மனை. 2. வாளின் தப்பார் - வாளால் ஓங்கி வெட்டுதலைத் தவறார். 3. ஞமலி - நாய். 4. கேள் அல் கேளிர் கேளாண்மையல்லாத கேளிராகிய பகைவர்.5.மதுகை-மனவலி; அரசர்க்குமானத்தின்மிக்க அறனும், பொருளும். இன்பமும் இல்லை என்று கூறினமையின், இது முதுமொழிக்காஞ்சியாயிற்று.