பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

101


யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே, பால்விட்டு "அயினியும் இன்று அயின்றனனே, வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை - வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே, அவரை 1O அழுங்கப்பற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக் கவிழ்ந்து நிலம்சேர அட்டதை மகிழ்ந்தன்றும், இகழ்ந்தன்றும், அதனினும் இலனே. வீரக்கழல் புனைந்து, வேப்பந் தளிரைச் சூடிக் கையிலே வில்லினைக் கொண்டு, தேரிலே அழகுற நின்றவன் யாரோ? அவன் யாவனேயாயினும், அவன் கண்ணி வாழ்வதாக ஐம்படைத் தாலி கழித்ததும் இலனே பால்குடித்தலை மறந்து இன்றே உணவுண் டானே போலும். இளையனாகவும் உள்ளான்; வெகுண்டு மேலும் மேலும் வரும் வீரரை மண் கவ்வச் செய்தான்! அதற்கு, அவன் மகிழவும் இல்லை! தன்னைப் பெருமையாக நினைக்கவும் இல்லை! அத்தகைய ஆற்றலுடையவன், அவன்! அவன் வாழ்க!

சொற்பொருள்: சாபம் - வில். 5. கொடிஞ்சி-மொட்டு:தேர்த் தட்டின் நடுவே மொட்டுப்போல் அமைந்த இடம். 7. தாலி - ஐம்படைத் தாலி, 6. யார்கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு. 8. அயினி உணவு. 10. இழித்தன் றென்பது. இழிந்தன்று என மெலிந்து நின்றது. 13 மகிழ்ந்தன்றும் எனவும் பாடம்.

78. அவர் ஊர் சென்று அழித்தவன் !

பாடியவர்: இடைக்குன்றுார் கிழார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை துறை: அரச வாகை, -

(பாண்டியனது புகழையும், வெற்றிச் சிறப்பையும் கூறதலால், அரச வாகை ஆயிற்று. உழிஞைத் திணையாகக் கொண்டு, அதற்கேற்பவும் உரைப்பர்) -

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள், அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து, அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து, விழுமியம், பெரியம், யாமே, நம்மிற் 5 பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது என, எள்ளி வந்த வம்ப மள்ளர், புல்லென் கண்ணர், புறத்திற் பெயர,