பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

புறநானூறு - மூலமும் உரையும்


ஈண்டு.அவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டு.அவர் மாண்இழை மகளிர் நாணினர் கழியத், 10 தந்தை தம்மூர் ஆங்கண். தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே!

போரிலே நிலைதளராத கால்களையும், வருத்துதற்கரிய பெருவலியையும் உடையவன் எம் இறைவன்! இவனை எதிர்த்து, ‘சிறப்புடையோம்! பெரும்படை உடையோம்! இவனோ இளைஞன் கொள்ளையும் பெரிது’ என இகழ்ந்து வந்தனர் பலர். அவரைப் போர்க்களத்திலே கொல்ல எண்ணாதவனாக, அவரவர் ஊர்வரை ஒடஒட வெருட்டி, அங்கங்கே போர்ப்பறை முழக்கிச் சென்று அழித்தவன் அன்றோ இவன்!

சொற்பொருள்: என்ஐ என் இறைவன். முணங்கு - மூரி. அளை குகை. 4. சிலைத்து - ஆர்த்து. புல்லென் கண்ணர் - ஒளி மங்கிய கண்ணையுடையராய்.1.தந்தை தம்மூர்: பால் வழுவமைதி, 'ஏவல் இளையர் தாய் வயிறு கறிப்ப' என்றாற்போலத் தந்தை தம்மூர்' என்றது, தாம் போற்றிச் செய்த நகரையன்றி, உறையூரும், கருவூரும் முதலாகிய ஊர்களை எனவும் கொள்ளப்படும்.

79. பகலோ சிறிது!

பாடியவர்: இலங்குன்றுார் கிழார். பாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரச வாகை,

(அரசனது புகழையும் வெற்றியையும் கூறுதலின் அரச வாகை ஆயிற்று)

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே, - - 5

எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே!

. . தன் பழநகர் வாயிலின் குளிர்ந்த நீருள்ள பொய்கையிலே மூழ்கி, மன்றத்து வேம்பின் தளிரைச் சூடிப், பறை ஒலி முன்னாக ஒலிக்கக், களிறுபோலப் பெருமிதமுடனே, வெம் போர் வல்ல நெடுஞ்செழியனும் வந்தான். அவனை எதிர்த்த நிலையற்ற மறவரோ மிகப்பலர். பகல் நேரம் மிகக் குறைவே! ஆதலால், அவருள் சிலர் உயிர்தப்பிப் பிழைக்கவும் கூடுமோ?