பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

105


கட்டிக்கொண்டிருக்கிற அவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவிலே முடிந்தது, ஊரைக் கொள்ள எண்ணிவந்த வீரனுடன், இந் நெடுந்தகை நடத்திய பெரும்போர்! - -

சொற்பொருள்: சாறு - விழா. தலைக்கொண்டென தொடங்கிற்றாக, பெண் - மனைவி. ஈற்று உற்றென - பெறுதலைப் பொருந்தினாளாக பட்டமாரி - பெய்கின்ற மழையுடைய ஞான்ற ஞாயிற்று - ஞாயிறு வீழ்ந்த பொழுதின்கண். 3. நிணக்கும் பிணிக்கும். இழிசினன் - புலைமகன். 4. போழ் தூண்டு ஊசியின் வாரைச் செலுத்தும் ஊசியினும்.

83. இருபாற்பட்ட ஊர்! -

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல்.

(ஒத்த அன்பினாற் காமம் உறாத வழியும், குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது இது என்பர். 'மையலூரும் என்போற் பெரிதும் நடுக்கம் அடைக’ என்பதாம்)

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்கு, என் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே; - அடுதோள் முயங்கல் அவைநாணுவ்லே, என்போற் பெருவிதுப் புறுக, என்றும் ஒருபால் படாஅது ஆகி இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

வீரக் கழலும் கரியதாடியும் உடைய இளையோனுக்காக என் வளைகள் கழல்கின்றன; தாய்க்கும் அஞ்சுகிறேன். பகைவரை வென்ற அவன் தோளைத் தழுவ விம்பினும் சபையோரைக் கண்டு நாணி நிற்பேன். இந்த ஊர் என்பக்கமும் நிற்காது; என் தாய்ப்பக்கமும் நில்லாது, இரு பக்கத்துமாக மாறிமாறி நின்று மயங்குகின்றதே! யான் என் செய்வேன்?

சொற்பொருள்: 1.அணல்-தாடி, மீசை.2.தொடி கழித்திடுதல் - வளை என்னைக் கைவிடுதலால், 3. அவை - அவையின் கண் உள்ளாரை.4 விதுப்புறுதல்-நடுக்கமுறல்.6.இருபாற்பட்ட-தாயும் மகளுமாகிய இரு கூற்றிற்பட்ட

- 84. புற்கையும் பெருந்தோளும் !

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற் கிள்ளி. திணை: கைக்கிளை. துறை : பழிச்சுதல்.