பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

புறநானூறு - மூலமும் உரையும்



((காதலனின் சிறப்பைக் கூறிப் போற்றுதலால் பழிச்சுதல் ஆயிற்று. பெண்பாற் கைக்கிளைக்குப் பேராசிரியரும் (தொல் செய். சூ. 160), சுட்டி யொருவர்ப் பெயர் கொள்ளாத பாடாண் திணைக் கைக்கிளைக்கு நச்சினார்க்கினியரும் (செய். சூ. 160) எடுத்துக் காட்டுவர்)

என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே; யாமே, புறஞ்சிறை இருந்தும் பென்னன் னம்மே, போறெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே, கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறையன் னன்னே! என் தலைவன், கூழுண்டாலும் பெரிய தோள்வளம் உடையவன்; யானோ அவன் சிறைப்புறத்திலேயே இருந்தும் பசலை பாய்ந்தவளானேன். போர்க்களத்தில் அவன் புகுந்தால், பேரூர் விழாவிலே செருக்குற்று ஆடிவரும் மள்ளருக்கு உமணர் அஞ்சுவது போன்று, பகைவரை அச்சமுறச் செய்யும் ஆற்றலுள்ளவன் அவன்.

சொற்பொருள்: 2. பொன் அன்னம் - பொன் போலும் நிறத்தையுடைய பசலை உடையேம் ஆயினேம். 5. ஏமுற்றுக் கழிந்த மள்ளர் - தம் வலியைத் தாமே வியந்து செருக்கி வந்து, பின்னை அதனை இழந்த வீரர். - 85. யான் கண்டனன் !

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை : பழிச்சுதல்.

(இதுவும் மேற் செய்யுளைப் போன்றதே. ஏதாவது ஒன்றைச் சார்ந்து நின்று ஒருவரைப் பார்த்தலும், கேட்டலும் நாணமுடைய குலமகளிர்க்கு இயல்பு; அதனை இச் செய்யுளும் அடுத்த செய்யுளும் காட்டும்)

என்னைக்கு ஊர்இஃது அன்மை யானும்,

என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்,

ஆடுஆடு என்ப ஒருசா ரோரோ;

ஆடன்று என்ப ஒருசா ரோரே,

நல்ல, பல்லோர் இருநன் மொழியே,

அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,

முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,

யான்கண்டனன்.அவன் ஆடா குதலே.