பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

புறநானூறு - மூலமும் உரையும்



(நீ களம் புகின், இருநிலம் மண்கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ?' என்று, அதியனின் தானை மறத்தை வியந்து போற்றுவது இச் செய்யுள்)

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி உடலின், மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? 5

அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, விரிமணல்ளுெமரக், கல்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை 10

வழுவில் வன்கை, மறவர் பெரும! இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

புலி சீறினால் எதிரே நிற்கும் மானினம் உளதோ? ஞாயிறு எழுமாயின் ஓடாது நிற்கும் இருளும் வானில் உளதோ? ஆற்றல் மிக்க கடாவானது போகுதற்கு அரிய துறையும் உண்டோ? இல்லை அன்றோ! முழந்தாள்வரை நீண்ட வலிய கையினையுடைய வீரர்க்குத் தலைவனே! அவைபோல, நின் நாட்டைக் கைப்பற்றப் போரிடும் பகை வீரரும் உளரோ? நீ களம் புகுந்தால், எவர்தாம் நின்னை எதிருற்று எதிர்க்கவல்லார்?

சொற்பொருள்: 2 அடை- இலை. குளவி - மலை மல்லிகை. 4. மருளின-மயங்கிய விரிமணல் புனல் கொழிக்கப்பட்ட மணல். 10. எழுமரம் - கணையமரம், கோட்டைக் கதவின் உட்புறத்தே குறுக்காகப் போடப்படும் வலிய மரம்.

91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(அதியமான் அளித்த கருந்ெல்லிக் கனியைப் பெற்று உண்டதன்பின், 'அவன் உளச்செவ்வியை வியந்து பாடியது இது. 'நீல மணிடற்று ஒருவன் போல மன்னுக’ என வாழ்த்தலின், வாழ்த்தியல் ஆயிற்று. தன்னாக்கங் கருதானாய்ப் பல்லுயிர் களையும் காத்தலே கருத்தாக விடமுண்ட புண்ணியன் நீல மணிமிடற்றன் அதனால், அவனை உவமை கூறினார்)