பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

111


வலம்படு வ்ாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை, ஆர்கலி நறவின், அதியர் கோமான் போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி 5 நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே! தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கினி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், - 10 சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே. களத்திலே பகைவரை வென்று வீரவளை அணிந்திருக்கும் தலைவனே! வீரச் செல்வமும் பொன்மாலையும் உடைய அஞ்சியே! மலைச்சரிவிலே கடுமுயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனி அது. அதனைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளையும் பேற்றினையும் கூறாது, நின்னுள்ளத்திலேயே அடக்கிக்கொண்டு, எம் சாதல் ஒழிய எமக்கு அளித்தனையே! பெருமானே! பிறையணிந்த நீலமணிமிடற்று இறைவனைப்போல, நீயும் நிலைபெற்று வாழ்வாயாக!

92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(அரசனது இயல்பை வியந்து கூறிப் பாராட்டுதலால் இயன்மொழி ஆயிற்று)

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள்அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை, என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார் கடிமதில் அரண்பல கடந்து 5 நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே. புதல்வரின் மழலைச் சொற்கள் யாழ் இசையும் அல்ல; காலத்தோடும் கூடியிராதன பொருளும் அறிய முடியாதன; எனினும், தந்தையர்க்கு அருளுதல்போல வந்தனவாம். என் சொற்களும் அத்தகையவே! பகைவர் வலிய அரண்கள் பலவும் கடந்த நெடுமான்அஞ்சியே! அவ்வாறே கருதி, நீயும் எனக்கு அருள்கின்றாய்! . .