பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgiả csásä . 113

அடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள். 12. Dமிறு-தேனி.14.ததைய - சிதைய.15 விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண்.

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

. பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை : அரச வாகை.

(இனியை பெரும எமக்கே நின் ஒன்னாதோர்க்கு இன்னாய் பெரும என, அரசனது கொடை வென்றியையும் போர் வென்றியையும் கூறுவது செய்யுள். பாடாண்திணைத் துறைகளுள் ஒன்றான இயன்மொழித் துறைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டினர் (தொல், புறத். சூ. 29)

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

இனியை, பெரும, எமக்கே, மற்றதன்

துன்னருங் கடாஅம் போல

இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே 5

நீர்த்துறையின் கண்ணே யானையைக் காணாய்! சிறு பிள்ளைகள் அதன் வெண்கோட்டைக் கழுவுகின்றனர். அப் பெருங் களிறு அவருக்கு எளியதாய் இனியதாய் விளங்குகின்றது. அவ்வாறே, பகைவர் நெருங்குதற்கு அரிய வலிமையுடையாய் எனினும், நீ எமக்கு இனிதாகவே விளங்குகின்றனை, பெருமானே!

சொற்பொருள்: 1. குறுமாக்கள் - சிறுபிள்ளைகள்; மனவுணர்வு நிரம்பாமையின், இளஞ்சிறுவர்களைக் “குறு மாக்கள்” என்றார். கழாஅலின் - கழுவுதல் காரணமாக கழுவப் படுதலால் எனினும் அமையும்! -

95. புதியதும் உடைந்ததும்! பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை:பாடாண். துறை: வாண் மங்கலம்.

(அதியமானுடைய படைக்கலச்சிறப்பைப் புகழ்ந்து கூறினர்; அதனால் வாள் மங்கலம் ஆயிற்று. வகைத் திணைத் துறைகளுள், 'பெரும்பகை தாங்கும் வேல் என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டினர் (தொல், புறத். சூ. 17 உரை)

இவ்வே, பீலி அணிந்து, மாலைசூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியன்நகரவ்வே, அவ்வே,

பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து, கொல்துறைக் குற்றில மாதோ, என்றும் - 5