பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

117


முனைத் தெவ்வர் முரண் அவியப் பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர்

மதிற் கதவம் எழுச் செல்லவும்: பிணன் அழுங்கக் களன் உழக்கிச் 5

செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நன்மாச் செலக் கண்டவர் தவை முள்ளின் புழை யடைப்பவும்;

மார்புறச் சேர்ந்து ஒல்காத்

தோல் செறிப்பின் நின்வேல் கண்டவர் 10 தோல் கழியொடு பிடி செறிப்பவும்: வாள் வாய்த்த வடுப்பரந்த நின்

மற மைந்தர் மைந்து கண்டவர்

புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்: நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, 15

உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும் சுற்றத்து அனையை, ஆகலின், போற்றார் இரங்க விளிவது கொல்லோ, வரம்பு அணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப் பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே! 20

நின் யானைகள் போகக்கண்ட பகைவர் தம் அரணுக்குக் கதவும் கணைய மரமும் புதிது செய்ய முயல்வர். நின் குதிரைகள் போகக் கண்டால், காட்டு வாயில்களை வேலமுள்ளால் அடைப்பர். பகைவர்மீது நீ எறிந்த வேல் ஊடுருவிச் செல்லக் கண்டவர், தம் வாளை உறையினின்றும் எடுக்கவும் அஞ்சுவர். நின் வீரரின் திறங்கண்டவர், தம் அம்பையும் மறைத்துக் கொள்வர். இவ்வாறு, பகைவர் அஞ்சும் வலியுடையன நின் படைகள்! நீயோ, வெண்சிறு கடுகைப் புகைத்தாலும் உயிரைக் கவர்ந்து செல்லும் எமனை ஒப்பவன்.போரிலோ, அக் கூற்றுவன் போலப் பகைவர்தம் உயிரைப் போக்குபவன். அதனால், நீர்வளமும் விளைபொருள் மிகுதியும் உடைய பகைவர் நாடுகள் எல்லாம் நின்னைப் பகைப்பின் கெடும்.

சொற்பொருள்: 3. செல்லவும் - புதியனவாக இடுதற்குப் பழையன போக்கவும். 5. பிணன் அழுங்க - பட்டோரது பிணம் உருவழிய. 6. அசைஇய வருந்திய, 8. கவைமுள் கவைத்த வேலமுள். 10. செறிப்புஇல் - உறையின் கண் செறித்தல் இல்லாத, 11. தோல்கழி - கிடுகுக் காம்பு. பிடி - கைந்நீட்டு, கைப்பிடியாகிய காம்பு. 14. ஒடுக்கவும் தூணியகத்து அடக்கிக் கொள்ளவும்.