பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

புறநானூறு - மூலமும் உரையும்



('விறலி செல்வை யாயின், சேணோன் அல்லன், புரத்தல் வல்லன் என ஆற்றுப்படுத்தலின், விறலியாற்றுப் படை ஆயிற்று)

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத் தூம்பு.அகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக், 'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் சுரன்முதல் இருந்த சில்வளை விறலி! செல்வை யாயின், சேணோன் அல்லன்; + 5

முனைசுடவெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும் பகைப்புலத்தோனே, பல்வேல் அஞ்சி; பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, 10

வறத்தற் காலை யாயினும், புரத்தல் வல்லன், வாழ்க, அவன் தாளே!

காவின் ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தூங்குகிறது. மற்றொரு புறத்தே சிறிய முழா தூங்குகிறது. இவற்றைச் சுமந்தவாறே, எமக்கு இடுவார் யாருமிலராயினர்; யாரே எமக்கு உதவவல்லார்’ எனச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே! அதியனோ நெடுந்தொலைவில் இல்லை. பகைவர் தேயத்துத்தான் போயுள்ளான்.வெற்றியுடன் விரைவில் திரும்பிவிடுவான். உலகமே வறுமையுற்று வாடினாலும், பாதுகாத்து நிற்கவல்லவன் அவன். அவன்பால் நீ தாராளமாகச் செல்லலாம். நாடே வறட்சியுற்றுப் போன காலமாயினும், அவன் தவறாது நினக்குக் கறியும் சோறும் என்றும் உதவுவான். அவன் தாள் வாழ்க!

சொற்பொருள்: 1. பதலை - ஒருதலை முகமுடையதொரு தோற்கருவி. 2, தூம்பு துளை. அகச் சிறுமுழா அகத்தேயுடைய சிறிய முழாவை தூங்கத் தூக்கி-தூங்கும் பரிசு தூக்கித் தூங்குதல் - தொங்குதல். 4. சுரன்முதல் - வழியிடத்தே. 6. முனைசுட முனைப்புலத்தைச் சுடுதலான். மங்குல். இருட்சியையுடைய கரிய புகை 7. மஞ்சின் முகில்போல.9. புலரா மண்டை - உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத கலம். 10. மெழுகு மெல்லடையின் - மெழுகானியன்ற மெல்லிய அடைபோல. 11. வறத்தற்காலை - உலகம் வறுமை யடைதலையுடைய காலத்து; அலத்தற்காலை எனவும் பாடம்.

104. யானையும் முதலையும்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. வாகை: பாடாண். துறை: அரசவாகை.