பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

125


107. மாரியும் பாரியும்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் வேள் பாரி. திணை: பாடாண். துறை : இயன்மொழி.

('பாரி மாரியைப் பேர்லக் கைம்மாறு கருதாது ஈகின்றவன்' என்றலின், இயன்மொழி ஆயிற்று)

'பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்: ' மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப்பதுவே.

செந்நாப் புலவர் எல்லோரும், 'பாரி பாரி' என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லனே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ள தன்றோ? (பாரியை இகழ்ந்ததுபோலப்புகழ்ந்தது. பயனிலை புரிந்த வழக்கம் இது என்பர் பேராசிரியர்)

108. பறம்பும் பாரியும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: இயன்மொழி.

("பரிசிலர் இரப்பின், வாரேன் என்னான், அவர் வரை யன்னே' எனப் பாரியது இயல்பை உரைத்தலால் இயன்மொழி ஆயிற்று) ر.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின், அம்புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடின்ார் அதுவே: அறம்பூண்டு, பாரியும், பரிசிலர் இரப்பின், 5 'வாரேன் என்னான், அவர் வரை யன்னே. -

குறத்தி அடுப்பில் மாட்டி எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின், அதனின்று கமழும் நறும்புகை வேங்கைப் பூங்கொம்பினுடும் சென்று பரவி நிற்கும். அத்தகைய மலைச்சாரலினை உடைய பறம்பினைப் பாடுவார்க்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்த பேரருளாளன் பாரி. பரிசிலர் இரந்தால், 'வாரேன்’ என்றுகூடச் சொல்லாது, அப்போதே அவர் உடைமையாகி விடுபவன் அவன். •

சொற்பொருள்: 1. மாட்டிய மடுத்து எரிக்கப்பட்ட 2. ஆரம் - சந்தனம்.