பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

127


ஆடியும் பாடியும் நீர் சென்றீரானால், அவன் நாட்டையும் மலையையும் ஒருசேர நுமக்குப் பரிசிலாக வழங்கி விடுவான். அதுவே சிறந்த வழி.

சொற்பொருள்: 1 அளிது - இரங்கத்தக்கது. 2. நளி - பெருமை. 4. வெதிரின் மூங்கிலினது. 5. ஊழ்க்கும் - பழுத்து மணம் நாறும். 7. ஒரி பாய்தலின் - ஒரிபாய்தலான்; ஓரி என்பது, தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம், முசுக்கலை எனினும் அமையும்; முசுக்கலை - ஆண் குரங்கு மீது அழிந்து அதன்மேற்பவர் அழிந்து; பவர் கொடி, 9. வான்கண் அற்றுஅகல நீள உயரத்தால் வானிடத்தை யொக்கும். 13. தாளில் கொள்ளலிர் - உங்கள் முயற்சியால் கொள்ள மாட்டீர். வாளில் - நுமது வாள்வலியால். தாரலன் - அவன் தாரான் 15. சுகிர்புரி - வடித்து முறுக்கப்பட்ட 18. ஒருங்கு ஈயும்மே - கூடத் தருகுவன்.

110. யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல். சிறப்பு: 'மூவிருங்கூடி என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.

(பாரி மகளிரை மணம் செய்துதர மறுத்து, அதனால் முற்றியிருந்த மூவேந்தரையும் அறிவு கொளுத்துவாராகப் பாடிய செய்யுள் இது. ‘யாமும், பாரியும் உளமே குன்றும் உண்டு; ஆயின் மகளிர் இல்லை என்றதாகக் கொள்ளுக.)

கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கெளற்கு அரிதே. முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,

யாமும் பாரியும் உளமே, 5

குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே,

வஞ்சனையாலல்லாது எதிர்த்தே நின்று பகைவரைக் கொல்லும் பெரும்படை உடையவர்தாம் நீவிர் மூவரும். எனினும், பறம்பினை வென்று கைப்பற்ற நும்மாலும் இயலாது. முந்நூறு ஊர்கள் உடைய இந் நாட்டின் ஒவ்வொருவரும் பரிசிலர் பெற்றுச் சென்று விட்டனர். நீவிரும் பாடி வந்தால் யாமும் பாரியும் உள்ளோம்; அவனுடைய மலையும் இருக்கிறது. (தம்மையும் பாரியின் செல்வமாகக் கூறும் புலவர் உள்ளத்தினை வியந்து போற்றுக)