பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

புறநானூறு - மூலமும் உரையும்



114. உயர்ந்தோன் மலை!

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.சிறப்பு: மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது. -

• (இச் செய்யுளும் கபிலர் பாரி மகளிரது நிலைக்கு வருந்திப் பறம்பைக் கடந்து செல்லும்போது பாடியதே ஆகும். தேர் வழங்கும்’ என்னாமல், தேர்வீசும்’ எனக் கூறும் சொற்களுள் உட்பொருளாக விளங்கும் பெருந்தகைமையை நினைந்து போற்றுக) -

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும், சிறு வரை சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற, களிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகு முன்றில், 5 தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

மதுப்பிழிவார் எறிந்த கோதுகளிலிருந்து மதுச்சிதறும்; அவ்வாறு சிதறிய மது சேறாகி நாற்புறமும் ஒழுகும் வளமிக்க மலையே! அருகே நிற்பார்க்கும் நீ தோன்றுவாய், சிறு தொலைவு சென்று நிற்பார்க்கும் நீ தோன்றுவாய், எல்லாம், தேர் வழங்கிச் சிறந்தவனான உயர்ந்தோன் பாரி நின்பால் தங்கி இருந்த அந்தச் சிறப்பினாலே அன்றோ?

சொற்பொருள்: 1. சிறுவரை சென்று - சிறிது எல்லை போய். 2.மன்ற - நிச்சயமாக, 3. மென்று இட்ட - மென்று போடப்பட்ட கவளம் போல - கவளத்தினது கோதுபோல. 4. சிதறல் - சிதறியவற்றினின்றும் 5 வார் அசும்பு ஒழுகும் வார்ந்த மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய 6. நெடியோன் - உயர்ந்தோனுடைய, என்றது பாரியை. -

115. அந்தோ பெரும நீயே! பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல்; துறை : கையறு நிலை. சிறப்பு: பறம்பின் வளமை.

(பறம்பை விட்டுப் போவார், அதன் செழுமையை எண்ணியும், அதுதான் பிறர்க்கு உரித்தாகிய கொடுமையைக் கருதியும் இப்படிப் புலம்புகின்றனர்) -

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,