பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

புறநானூறு - மூலமும் உரையும்


காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியன்மலை அற்றே அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை 15 பெரிய நறவின், கூர் வேற் பாரியது அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த

வலம் படுதானை வேந்தர் பொலம் படைக் கலிமா எண்ணுவோரே.

மயிலினம் சோலையிலே ஆட, குரங்கினம் மலை முகடுகளிலே தாவி விளையாட, அக் குரங்கினம் அனைத்தும் கூடித் தின்று தீராத கனிவகைகள் கணக்கற்று அவ் வளமலையில் எங்கும் விளங்கின. உயர்ந்த அதன் கோடேறி நின்று, தம் தந்தையினை வெல்ல வகை அறியாதவராய்ப் போரேற்று வந்த மன்னரின் குதிரைகளை, முன்னர் வேடிக்கையாக எண்ணுபவர் இவர்! இன்றோ, வேலி சூழ்ந்த சிற்றில் முற்றத்திலே, ஈத்திலைக் குப்பையேறி நின்று, உப்பு வண்டிகளை எண்ணுகின்றனர்! அந் நிலையை எண்ணி எண்ணி வருந்துவேன் யான்! என் ஆயுள் இப்போதே கெடுவதாக!

சொற்பொருள்: 1. தீநீர் - இனிய நீர். குவளை - செங்கழுநீர். 2. கூம்பு முகை முழு நெறி - புறவிதழ் ஒடிந்த முழுப்பூ புரள்வரும் - தழையுடை அசையும். 4. கவலை கவர்த்த வழி. 5. பஞ்சு முன்றில் - பஞ்சு பரந்த முற்றம்; என்றது, அக்கால மகளிர் பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூலாக நூற்றலால் எஞ்சிய பஞ்சு சிதறிக் கிடக்கின்ற முன்றில் என்றதாம். 6. பீரை நாறிய - பீர்க்கு முளைத்த, சுரை இவர் - சுரைக்கொடி படர்ந்த ஈத்திலைக் குப்பையேறி என்றதனால், ஈந்தின் மிகுதியும் பெறப்படும். 8. உப்பு ஒய் ஒழுகை உப்புச் செலுத்தும் சகடத்தை சகடம் - வண்டி, 9. காலை தேய்கமா - எனது வாழ்நாள் கெடுவதாக மா : வியங்கோல் அசை.1. கலை - முசுக்கலை.17. அருமை பெறுதற்கு அருமையை.18. பொலம்படை - பொன்னாற் செய்யப்பட்ட கலம் முதலியவற்றை உடைய, கலிமா - மனம் செருக்கிய குதிரை.

117. தந்தை நாடு!

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல். துறை: கையறு. நிலை.

(பாரி மகளிர்க்கு உரித்தாயிருந்த நாட்டது வளமையை உரைத்து, அதனை இழந்து நிற்கும் அவல நிலைக்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது)

மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,