பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

புலியூர்க்கேசிகன் - 135

கூட்டி அடப்பட்ட புளிங் கறியை யுடைத்து. 4. யாணர்த்து

புதுவருவாயை யுடைத்து முன்பு. நந்துங் கொல் - இனி அது கெடுங்கொல்லோ. 6. பணை கெழு முரசையுடைய வேந்தரை

இறந்தும் - அரசரைக் காட்டிலும் மிகுதியாக

120. கம்பலை கண்ட நாடு!

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.

('நாடு யாணர்த்து; அது நந்துங் கொல்லோ எனக் கூறுவது

இச் செய்யுள். இதுவும் பாரி மகளிரது நாடும் தந்தையும்

இழந்தாராக நின்ற நிலைக்கு ஆற்றாராய்க் கூறியது ஆகும்)

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் கார்ப் பெயற் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப், பூழி மயங்கப் பல உழுது, வித்திப் பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக் களைகால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, 5

மென்மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக், கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, வாலிதின் விளைந்த புது வரகு அரியத் தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் 10

கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம் ஆக, நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல் புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப் பெருந் தோள் தாலம் பூசல் மேவர, 15

வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ: இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேட் சிமைப் புலவர் பாடி யானாப் பண்பிற் பகைவர்

ஒடுகழல் கம்பலை கண்ட 2O

செறுவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

இக் கருங்கூந்தல் மகளிரின் தந்தையினது நாடான இப் பறம்பு, மூங்கில் இழைந்து ஒலிக்கும் உயர்ந்த கோடுகளை உடையது. பகைவரது புறங்கொடுத்து ஓடச் செய்யும் வீரக் கழல்களின் ஒலி கேட்டும் நாணிப் பின் செல்லாது, போரிடு தலையே விரும்பி எதிர்நின்று பொரும், புலவர் போற்றும்