பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

புறநானூறு - மூலமும் உரையும்


இயல்பினன், என் தலைவனான பாரி. அவனது வெற்றியை உடையது இந்த நாடு. வரகறுக்கவும், தினையரியவும், எள்ளிளங்காய் கறுக்கவும், வெள்ளை அவரைக்காய் அறுக்கவும், அன்று எங்கும் நிகழ்வதைக் காணலாம்.புல்வேய்ந்த சிறு குடிசை தோறும் வருவார்க்கு மதுவை உண்ணக் கொடுப்பர் மலையர். நெய்யிலே கடலை துள்ள, அதனோடு சோறும் சமைத்து வீட்டிலுள்ளவரை உண்பிக்கப் பாத்திரங் கழுவுவர் இல்லின் மனைவியர். இவ்வாறெல்லாம் முன்னர் வளமுடன் விளங்கிய பறம்பின் புதுவருவாயும் இனிக் கெட்டுவிடும் போலும்!

சொற்பொருள்: 1. வெப்புள் விளைந்த வெம்மை முதிர்ந்த, வேங்கைச் செஞ்சுவல் - வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து. கலித்த - மிகுந்த பெரும்பாட்டு ஈரத்து - பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கண்.3. பூழி மயங்க - புழுதி கலக்க பல உழுது பலசால்பட உழுது. 4. பல்லி'ஆடிய தாவியடிக்கப்பட்ட 14.கடலை விசைப்ப-கடலைதுள்ள.15. தாலம்பூசல் மேவர-தாலம் பூசுதலைப் பொருந்த என்பது, உண்டற்கு முன்னும் உண்ட பின்னும் கலத்தைக் கழுவ என்பதாம். நந்தும் கொல் - இனி அது கெடும் போலும்.18. சேண்சிமை - உயர்ந்த உச்சியையுடைய.20. ஒடு கழல் கம்பலை கண்ட புறக்கொடுத்து ஒடும் வீரக்கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற.

121. புலவரும் பொதுநோக்கமும்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி.

('பொதுநோக்கு ஒழிவாயாக’ என உறுதிப்பொருள் உரைத்தலால், பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. பாடாண் திணைக்கு உரிய விடைகள் பலவற்றுள், சிறிது என்ற விடைக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவர்)

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் பலரும் வருவர், பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே, மாவண் தோன்றல்; - - அது நற்கு அறிந்தனை யாயின், 5 பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

வள்ளன்மையிற் சிறந்த எம் தலைவனே! நின் ஒருவனையே நினைத்து நாற்புறமும் இருந்து பரிசிலர் பலரும் வருவர். அவர் தகுதியை அளவிட்டு அறிதல் இயலாது. வழங்குவதோ நினக்கு எளிது. அவர் தகுதியை நன்கு அறிந்தாயானால், இனியேனும்