பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμιάααθεά 139

நாளும் நல்ல நாளன்று. புள் நிமித்தமும் தீதாகத் தோன்றும். மன்னனைச் சந்திக்கும் சமயமும் அன்று. இவ்வாறு சென்றும், தம் திறனற்ற சொற்களால் முள்ளுர் மலைக்குரிய காரியைக் கண்டு பாடியவருங்கூட வெறுங்கையோடு திரும்பார். அவன் வள்ளன்மையின் சிறப்பு அத்துணைப் பெரிதாகும். t

சொற்பொருள்: 1. நாள் அன்று - நல்லநாள் அன்றாக, புள் - புள்நிமித்தம் தட்ப தடிப்ப.2 பதன் அன்று புக்கு - செவ்வியன் றாகச் சென்று கூடி திறன் அன்று கூறுபாடு அன்றாக, 3. நெறி கொள - ஒழுங்குபட 4 பாடு ஆன்று ஒசை நிறைத்து. இரங்கும் ஒலிக்கும்.

125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார். பாடப்பட்டோன்: தேர்வண் மலையன். திணை: வாகை துறை: அரச வாகை. குறிப்பு:சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர். -

(மலையமானது போர் வென்றியது மேம்பாட்டைச் சிறப்பித்துப் பாடினர்)

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை, பரூஉக் கண் மண்டையொடு, ஊழ்மாறு பெயர உண்கும், எந்தை நிற் காண்குவந்திசினே, நள்ளாதார் மிடல் சாய்த்த . 5 வல்லாள! நின் மகிழிருக் கையே உழுத நோன் பகடு அழிதின் றாங்கு நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே, குன்றத் தன்ன களிறு பெயரச் கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே; 10

வெலிஇயோன் இவன் எனக் 'கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு விரைந்து வந்து, சமந் தாங்கிய, வல்வேல் மலையன் அல்லன் ஆயின் நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத், 15 தோற்றோன் தானும், நிற்கூறும்மே, தொலைஇயோன் இவன் என,