பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

புறநானூறு - மூலமும் உரையும்



ஒருநீ ஆயினை, பெரும பெரு மழைக்கு இருக்கை சான்ற உயர் மலைத் திருத்தகு சேஎய்! நிற் பெற்றிசி னோர்க்கே. 20

பஞ்சு போன்ற மென்மையான ஊனையும் கள்ளையும் இடைவிடாது பருகி மகிழும் எம் தலைவனே! பகைவலி அனைத்தும் தொலைத்த ஆண்மையனே! உழுது வரும் மாடு, நெல்லைப் பிறர்க்கு அளித்துத் தான் வைக்கோலைத் தின்பது போலப், பெற்ற செல்வத்தைப் பிறர்க்கு வழங்கி, எஞ்சியதை அமுதாக எண்ணி உண்டு மகிழும் வல்லாளனே! என்னே, நின் பெருமை! வென்றவனும் வெற்றிக்குக் காரணன் நீயே என்பான்! தோற்றவனும் தன்னைத் தோற்பித்தவன் நீயே எனப் புகழ்வான்! இவ்வாறு, போரிட்ட இருவருமே நின்னையே புகழப், புகழுக்கு ஒருவனாய் விளங்கும் பெருமானே! செவ்வேளை ஒப்பவனே! பகையும் நட்பும் ஒருங்கே போற்றும் நீ வாழ்க!

சொற்பொருள்: 1 பருத்திப் பெண்டின் - பருத்தி நூற்கும் பெண்ணது. பனுவல் அன்ன . சுகிர்ந்த பஞ்சு போன்ற 2. நிணம் தயங்கு கொழுங்குறை - நிணமமைந்த கொழுவிய தடிகளை; தடி - ஊன். 3. பரூஉக்கண் - பரிய உடலிடத்தையுடைய மண்டையொடு - கள்வார்த்த மண்டையோடு, 11. வெலீஇயோன் - நம்மை வெல்வித்தோன். 17. தொலை இயோன் - நம்மைத் தோல்வியுறச் செய்தோன். 19. இருக்கை சான்ற இருப்பிடமாதற்கு அமைந்த 20. நிற் பெற்றிசினோர்க்கு - நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு. -

126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி, திணை பாடாண் துறை: பரிசில்

(நின் வண்மையால், நின்பால் வந்து நின்று பாடினோம்; எமக்கும் வழங்குக என்பது தோன்றப் பாடினர்; இதனால், பரிசில் துறை ஆயிற்று. கபிலரின் செவ்வியை இச் செய்யுள் மிகவுயர்த்துப் பாடியுள்ளதனையும் காணலாம்) -

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக! வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே 5 நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்,