பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

141


பறை இசைஅருவி, முள்ளுர்ப் பொருந,
தெறலரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் 10

புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்து சென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்,
பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப், 15

பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை,
இன்மை துரப்ப, அசைதர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே, முள்ளெயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப,
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, 20

அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே! பகைவர் யானைப் பட்டத்துப் பொன்னைப் பரிசிலர்க்குப் பொற்றாமரைப் பூவாக்கிச் சூடிய சிறந்தோன் மரபினனே! இரவு உறங்குவதுபோன்ற இருண்ட காடும், ஒலிமுழங்கும் அருவியும் உடைய முள்ளுர் மலையின் வேந்தனே! பேரறிவும் தூய்மையும் உடைய கபிலன், நின்னுடன் நின் சுற்றமும் பெருக, இனிப் புகழ்தற்கு இடமில்லை எனும்படி, நின் புகழ் உயர்வுடன் நிலைபெற்று நிற்கப் பாடினான். சேரன் மேற்கடலிற் பொன்தரும் நாவாய் செலுத்தும்போது, இடையில் பிறர் கலம் போதல் ஒவ்வுமோ? கபிலன் பாடிய நின்னை எம்மாற் பாடவும் முடியுமோ? அக் கபிலனிலும் அறிவில் குறைந்தேமாயினும் யாமும் புகழ்ந்து பாடுவோம். முரசுகள் முழங்கப் போர்க்களத்தினிடத்தே பொருந்தாப் பகைவரின் யானைகளை அழித்து, அவரைத் தடுத்து வெற்றி கொண்டவனே! பெண்ணையாற்றங்கரை நாட்டின் தலைவனே! எம் உரையையும் கேட்டு, எமக்கும் மனமுவந்து அருள்வாயாக! - -

சொற்பொருள்: 1. ஒடைப்பொன் கொண்டு - பட்டத்திற் பொன்னைக் கொண்டு.2. தைஇ- செய்து.4, மருக - மரபினுள்ளாய். 5. வல்லேம் அல்லேம் ஆயினும் - ஒன்றைக் கற்றறிந்த வல்லேம் அல்லேம் ஆயினும், 6. கிளக்குவம் ஆயின் புகழைச் சொல்லுவோம் ஆயின். 7. இறும்பின் - சிறு காட்டையும். 15. பொலம்தரு நாவாய் - பொன்னைத் தரும் நாவாய்.17. இசைதர -