பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

புறநானூறு - மூலமும் உரையும்



நற்செய்கைக் கடமைப்பாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டதாகும்.

சொற்பொருள்: 1. அறவிலை வணிகன் - பொருளை விலையாகக் கொடுத்து, அதற்கு ஈடாக அறம் கொள்ளும் பண்டமாற்று வணிகன். 3. சான்றோர் - அமைந்தோர்.

135. காணவே வந்தேன்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை : பாடாண். துறை: பரிசில், -

('யான் வந்தது எதனையும் வேண்டியன்று; நின்னைக் காண்டல் வேண்டிய அளவே என்கிறார் புலவர். எனினும், அவன் பரிசில் நல்காதிரான் என்பது குறிப்பாகும்."அன்ன ஆக, நின் ஊழி' என உரைத்து, என்றும் வழங்கி வாழ்வாயாக எனக் கூறலின் வாழ்த்தியலும் ஆம்)

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை,

அருவிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித்

தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்,

வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்

பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் 5

வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப், படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி வந்தனென் எந்தை! யானே, யென்றும், 10 மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு கறையடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்! களிறும் அன்றே; மாவும் அன்றே; ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே: 15 பாணர், பாடுநர், பரிசிலர் ஆங்கவர், தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதெனப் பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு, அன்ன வாக, நின் ஊழி; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை; வேண்டார் - 2O

உறுமுரண் கடந்த ஆற்றல் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!