பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

149


என் பின்னே விறலி, தளர்ந்து நடந்துவர, யாழை ஒரு கையால் அணைத்துக்கொண்டே, நின் நல்ல புகழை நினைந்தவனாக நின்பால் வந்தேன். எம் இறைவனே! பரிசிலர்க்குக் கன்றுடன் பிடியும் அணியணியாக வழங்கும் மலைநாடனே! மாவேளாகிய ஆயே! யானையும் குதிரையும் தேருமன்று யான் வேண்டுவது! நின் பொருளைத் தம் பொருளென உரிமையால் பாணரும் புலவரும் கூத்தரும் தாமே கொள்பவர். எனினும், அதனை மீட்க எண்ணாது மகிழும் சுற்றமுடன் கூடிய வள்ளல் நீ. நின் வாழ்நாட்களும் அவ்வாறே பெருகுவதாக, பகைவரை வென்ற வலிமையும், யாவரும் ஒப்பப் புகழும் நாடும் உடையவனே! நின் அருள் நிலவும் உருவைக் காணவே யான் வந்தேன்!

சொற்பொருள்: 2. அருவிடர் - ஏறுதற்கரிய பிளப்பு. 3. தடவரல் - உடல் வளைவு. தகைமெல் ஒதுக்கின் பயில அடியிட்டு நடக்கின்ற மெல்லிய நடையையுடைய. 5. பொன் வார்ந்தன்ன - பொன்னைக் கம்பியாகச் செய்தாற் போன்ற புரிஅடங்கு முறுக்கு அடங்கிய 6. வேரிநவில் பனுவல் - வரிப் பொருண்மை யோடு பயிலும் பாட்டு. 12 இரியல் போக்கும் அணியாகச் சாய்த்துக் கொடுக்கும்.

136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஒடை கிழார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.

(‘நல்கினை விடுமதி பரிசில்” எனக் கேட்டலின், பரிசில் கடாநிலை ஆயிற்று. நினக்கு ஒத்தது நீ நாடி நல்கினை விடுமதி பரிசில் என்பது, கொடுப்பார் தம் தகுதியறிந்தே கொடுப்பாராவர் என்பதனை விளக்குவதாம்)

யாழ்ப்பத்தர்ப் புறம் கடுப்ப

இனழவலந்த பஃறுன்னத்து

இடைப் புரைபற்றிப், பிணி விடாஅ ஈர்க் குழாத்தோடு இறைகூர்ந்த - பேஎன் பகையென ஒன்று என்கோ? 5

உண்ணா மையின் ஊன் வாடித்,

தெண் ணிரின் கண் மல்கிக்,

கசிவுற்ற என் பல்கிளையொடு பசிஅலைக்கும் பகைஒன் றென்கோ? அன்ன தன்மையும் அறிந்து ஈயார், 1O