பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

153


- 139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்:ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. சிறப்பு: ‘வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், மெய் கூறுவல் என்னும் புலவரது உள்ளச் செவ்வி.

(ஆய் அண்டினரது சிறப்பை வியந்து கூறிப் பரிசில் வேட்டலின் பரிசில் கடாநிலை ஆயிற்று)

சுவல் அழுந்தப் பல காய

சில்லோதிப் பல்இளை ஞரும்மே,

அடி வருந்த நெடிது ஏறிய

கொடி மருங்குல் விறலிய ரும்மே,

வாழ்தல் வேண்டிப் 5

பொய் கூறேன், மெய் கூறுவல்;

ஓடாப் பூட்கை உரவோர் மருக!

உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந:

மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,

கணிபதம் பார்க்கும் காலை யன்றே; - 10

ஈதல் ஆனான், வேந்தே, வேந்தர்க்குச்

சாதல் அஞ்சாய், நீயே, ஆயிடை,

இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள்,

அருஞ் சமம் வருகுவதாயின், வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே. 15

சுமந்து சுமந்து தோள் வடுப்பட்ட இளைஞர்களோ பலர்; அடிவருந்த நெடும்பொழுது ஏறியதால் களைத்தனர் எம் விறலியர்; இவர் உயிர் வாழ்வதை விரும்பியும் யான் ஏதும்.பொய் செல்லேன். வலியோர் மரபினனே! நாஞ்சில் மலைக்கு வேந்தனே உண்மை யாகவே சொல்லுகிறேன்; என் வறுமைநிலை நின் செவ்வியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அச் சிறிதளவு காலமும் தாங்காததாகும். நின் அரசன் வேண்டியதை நினக்கு அளித்தனன்! அவனுக்காகப் போரிற் சாவவும் நீ அஞ்சாய். அப்படிப் போர் வந்துவிட்டால், நீயும் எனக்கு உதவுமுன் போருக்குப் புறப்பட்டு விட்டால், என் சுற்றமும் பசியால் அழிந்துபோம். ஆதலின் விரைந்து உதவி செய்து அருள்க, பெருமானே! -

சொற்பொருள்: 1. சுவல் அழுந்த - தோள் வடுப்பட பலகாய - பல முட்டுக்களையும் காய; முட்டுக்கள் - சுமைகள். காய சுமந்த. 2. சில்லோதி - சிலவாகிய மயிரையுடைய 3. நெடிது - நெடும் பொழுது.9. பரிசில் துன்னி - பரிசிற்கு வந்து பொருந்தி.