பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

157


"மலைவான் கொள்க' என, உயர்பலி தூஉய், மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க எனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள், பெயல்கண் மாறிய உவகையர், சாரற் புனத்தினை அயிலும் நாட! சினப் போர்க் - 5

கைவள் ஈகைக் கடுமான் பேக! யார்கொல் அளியள் தானே; நெருநல், சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக், குணில்பாய் முரசின் இரங்கும் அருவி நளிஇருஞ் சிலம்பின் சீறுர் ஆங்கண், 10

வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, நின்னும் நின்மலையும் பாட, இன்னாது இகுத்த கண்ணி நிறுத்தல் செல்லாள். முலையகம் நனைப்ப, விம்மிக் - குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே' 15

மழையற்றபோது பெய்யவேண்டியும், பெருமழை பெய்ய அதனை நிறுத்தல் வேண்டியும், தெய்வம் போற்றும் குறமக்கள், இவ்வாறு மழைமாறிய மகிழ்வினராய், புனத்து விளைந்த தினையை உண்டு மகிழும் வளநாடனே! வெல்போரும் கைவண்மையும் உடைய பேகனே! நேற்றுச் சுரத்திடையே, நடந்து இளைத்து வருந்திய என் சுற்றம் பசியால் வாட, அருவிகள் பல வீழும் உயரிய மலைச் சாரலின் சிற்றுாரின்கண், ஒரு வீட்டிலே சென்று வாழ்த்தி, நின்னையும் நின் மலையையும் பாடினேம். அப்பொழுது, கண்ணிர் இடையறாது சோரப் பொருமிக், குழல் இனைவது போலப் பெரிதும் அழுது நின்றனள், யாவளோ ஒருத்தி எம்மினும், நின்னால் அருள் செய்யப்பட வேண்டுமவள் முதற்கண் அவளே தான் பெருமானே! யார் தாமோ அவள்?

சொற்பொருள்: 1. மலை வான் கொள்க என - மலையை மழைவந்து சூழ்க என்று. 2. மாரி ஆன்று அம் மழை மிகப் பெய்தலான் அப்பெயல் அமைந்து மழை - முகில், மேக்கு உயர்க என - மேலே போவதாக வேண்டுமென. 4. பெயல்கண் மாறிய - மழை இடத்து மாறிய, 9. குணில்பாய் - கடிப்பு அறையப்பட்ட 13. இகுத்த சொரியப்பட்ட நிறுத்தல் செல்லாள் - ஒழித்தல் மாட்டாளாய்.15. குழல் இனைவது போல் - புல்லாங்குழல் இரங்கி ஒலிப்பது போல.