பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

5


நேமி யுய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5

செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! பொன்னோடைப் புகர் அணிநுதல் துன்னருந் திறல் கமழ்கடா அத்து எயிறு படையாக, எயிற்கதவு இடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில் 1 O

பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்; பொலங் கழற்காற், புலர் சாந்தின் 15

விலங் ககன்ற வியன் மார்ப! ஊர் இல்ல, உயவு அரிய. நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் 20 அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை, . நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் 25 இன்மை தீர்த்தல் வன்மை யானே. காவல் முரசம் 'இழும் என முழங்க, அருளொடு ஆட்சிச் சக்கரத்தை நடத்தி வந்த பாண்டியர் மரபினன், குற்றமற்ற கற்புச் செல்வியின் கணவன்; கொல் யானைப் பெரும்பிடரின்மீது அமர்ந்து, ஒளிவீசும் வாளினைக் கையிற் கொண்டு, களைப்பிலாது வன்மையுடன் போர்செய்யும் ஆற்றல் உடையவன்; உலகமே நிலை பிறழ்ந்தாலும் தன் சொல் பிறழாது போற்றுபவன், வீரக்கழல் முழங்கும் கால்களும், பரந்த, விரிந்த மார்பும் உடையவன் என்று பாண்டியனைப் போற்றி உரைக்கிறார் கவிஞர்.

ஊரும் இடைவழியில் இல்லை. கானலோ பொறுத்தற்கு அரிது. நீரோ காண்பதற்கு அரிது. வழியின் தொலைவோ மிகமிக நீண்டது. இப்படிப்பட்ட வழியினைக் கடந்தும் நின்னைத் தேடி இரவலர் வருவர். அவர் வரும் வழியில் வம்பலரை ஒழிக்கத் தொலைவிலே எதிர்பார்த்திருக்கும் மறவர், அவர் கண்மேற் கைகுவித்துப் பார்க்கும் கொடிய பார்வை, செவ்விய குறி