பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

159


பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன். வையாவிக் கோப் பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி, பரணர் பாட்டு’ எனவும் கொள்வர்.

"மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக! பசித்தும் வாரேம் பாரமும் இலமே! களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் 5

நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி, அறம்செய் தீமோ, அருள்வெய்யோய்! இஃதியாம் இரந்த பரிசில், அஃது இருளின், இனமணி நெடுந்தேர் ஏறி, இன்னாது உறைவி அரும்படர் களைமே! 10

மயில் பணியால் நடுங்குமெனப் போர்வை அளித்த புகழுடைய பேகனே கேள்; யாம் பசித்து நின்னை நாடி வருவேம் அல்லேம் எம்மால் காப்பாற்றப்படும் சுற்றமும் இன்று. யாழினை இனிதாக இசைத்து, "அருள் விரும்புவோயே. அறம் செய்வாயாக' என நின்னிடம் இரந்த பரிசில் எம் நலனுக்காக அன்று. இன்றிரவே நின் தேரேறிச் சென்று, நின் நினைவால் பொறுத்தற்கரிய நோயுடையவளாகக் காணவும் சகிக்காத துயருடன் வாழும் நின் மனைவியின் பிரிவுநோயைத் தீர்ப்பாயாக. இதுவே யாம், நின்னிடம் விரும்பும் பரிசில், பெருமானே!

சொற்பொருள்: 1. மடத்தகை - மெல்லிய தகைமையுடைய. பனிக்கும் - குளிரால் நடுங்கும். 2. படாஅம் - போர்வை. 4. பாரமும், இலம் - எம்மாற் புரக்கப்ப்டும் சுற்றமும் உடையேமல்லேம் 6. நயம் புரிந்து உறையுநர் - இசையின்பத்தை விரும்பி யுறைபவர். நடுங்கப் பண்ணி - இசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து. செய்தீமோ - செய்வாயாக. 6. அஃது - அஃதாவது. இருளின் இற்றை இரவின்கண்.10.இன்னாது உறைவி-காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள். அரும்படர் - பொறுத்தற்கரிய பிரிவாலுண்டாகிய துன்பத்தை

146. தேர் பூண்க மாவே! பாடியவர்: அரிசில் கிழார். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி,

அன்னவாக, நின் அருங்கல வெறுக்கை; - அவை பெறல் வேண்டேம், அடுபோர்ப் பேக!