பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

புறநானூறு - மூலமும் உரையும்



149. வண்மையான் மறந்தனர்!

பாடியவர்: வன்பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி.

('நின் வண்மையால், எமர் இரந்து வரலை மறந்தனர் என, நள்ளியது கொடை வென்றியைப் பாடலின் இயன் மொழி ஆயிற்று) -

நள்ளி! வாழியோ, நள்ளி! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

வரவுஎமர் மறந்தனர்; அது நீ

புரவுக்கடன் பூண்ட வண்மையானே. 5

நள்ளியே, ‘வாழ்வாயாக, நள்’ எனும்மாலை வேளையிலே மருதப்பண் வாசித்தலும், காலையிலே செவ்வழிப்பண் இசைத்தலும், எம் பாணரும் மறந்தனர்.அவரை மறக்கச் செய்தவன் நீயே! கொடுத்துக் காத்தலைக் கடனாகக் கொண்டு அவர்க்குப் பெருநிதி வழங்கிய நின் வண்மையாலேதான், அவர் பரிசிலுக்கு வேண்டிப்பாடும் தம் வழக்கத்தை அறவே மறந்து, இவ்வாறாயினர்!

சொற்பொருள்: 1. வாழி - வாழ்வாயாக, ஓ - அசை, நள்ளென் - நள்ளென்னும் ஒசையையுடைய 2 மாலை - மாலைப் பொழுதின் கண். மருதம் - மருதம் என்கின்ற பண்ணை. காலைக்கும் மாலைக்கும் இசைப்பதற்குரிய பண்கள் கூறப் பெற்றிருப்பதனை Φ_(σύδΤΙΤoj5.

150. நளி மலை நாடன்!

பாடியவர்: வன் பரணர் பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்.

(நள்ளியின் பெருமிதச் செவ்வியைப் பாட்டு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அவனது பண்பு மேம்பாடும் காட்டப்பட்டுள்ளது.) -

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன, பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித் தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என் உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி, மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால், 5