பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

புறநானூறு - மூலமும் உரையும்


((கொண்கானம் - கொங்கணம் என்னும் நாட்டுப் பகுதி. இதனை ஆண்டவன் கொண்கானத்து நன்னன். 'பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் என்று உரைப்பர் பாலை பாடிய பெருங் கடுங்கோ (நற். 391)

திரைபொரு முந்நீர்க் கரைநணரிச் செலினும் அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும், சின்னி வினவுவர், மாந்தர்; அதுபோல், அரசர் உழைய ராகவும், புரைதபு வள்ளியோர்ப் படர்குவர், புலவர்; அதனால், 5

“யானும், பெற்றது ஊதியம்; பேறியாது?’ என்னேன்; உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனெனே, 'ஈயென இரத்தலோ அரிதே நீ அது நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர் - எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் 10

துவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல இழிதரும் அருவி நின் கொண்பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே.

கடற்கரை வழியே செல்பவரும் வேட்கையுற்றால், தாம் அறிவாரைக் கண்டதும் சிறிதே உண்ணுநீர் கேட்பர். அது போல, மூவேந்தரிடத்திருந்தாரேனும் புலவர்கள் வள்ளன்மை உடையவரை நினைத்துச் செல்வர். யானோ வறுமையேன், ஆதலின், பெற்றது சிறிதேனும் இவன் செய்தது என்னென்று இகழும் வழக்கமும் இல்லாதவன். நின்னை எண்ணி வந்தேன். இரத்தல் அரிது. அது கண்டு நீ பரிசில் தரினும் தாராதிருப்பினும், நின் ஆண்மையையும், நின் கொண்கான நாட்டையும் பாடுதல் எனக்கு எளிதேயாம்.

சொற்பொருள்: 3. சின்னர் - சிறிய நீரை. 6. பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் - பெற்றதனைப் பயனாகக் கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், இவன் செய்தது என்’ என்று இகழேன். 7. உற்றனென் ஆதலின் வறுமையுற்றேன் ஆதலின். 8. அது - அப்பரிசில் 10. அறுவைத் துவிரி - துகிலினது தூய விரியை.

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

பாடியவர்: மோசிகீரனார். பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை

(பாணனை ஆற்றுப்படுத்துமுகத்தாற் கூறிய செய்யுள் ஆதலின் பாணாற்றுப் படை ஆயிற்று)