பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

169


வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, 'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க எனக், கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு, 5

இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

‘என் துன்பம் அறிந்து, என் துயர் தீர்பபவர் யாவரோ?’ எனச், சிறிய யாழைக் கைக்கொண்டு, நயமுடன் கேட்கும் பாணனே! பாழுரின்கண் நெருஞ்சிப்பூ கதிரவனை எதிர்கொண்டு மலர்வது போலப், பாணரது உண்கலம் கொண்கானம் கிழானது மாலை யணிந்த மார்பை நோக்கி மலர்ந்திருக்க காண்பாய்! ஆங்கு நீயும் செல்வாயாக!

சொற்பொருள்: 1. வணர்கோட்டு - வளைந்த கோட்டை யுடைய வாடு புடை-உலர்ந்த மருங்கிலே.3.கிளக்கும்-சொல்லும். இனி கேள் - யான் சொல்லுகின்றதனை இப்பொழுது கேட்பாயாக 4.நெருஞ்சிப்பசலை வான்பூ-நெருஞ்சியினது பொன் நிறத்தையுடைய தூய்மையான பூ. 5. சுடரின் எதிர் கொண்டாங்கு - ஞாயிற்றை எதிர் கொண்டாற் போல. 6. புலவர் - யாழ்ப் புலவரது; மண்டை - ஏற்கும் கலம். -

156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர்: மோசிகீரனார். பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(கொண்கானத்தின் சிறப்பைக் கூறுவாராக, அதற்கு உரியோனின் கொடை யியல்பைக் கூறுகின்றனர்)

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்; நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று நிறையருந் தானை வேந்தரைத் 5 திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே. - வண்மையிற் சிறந்திருப்பன; அல்லது வலிமையுடையன; இவ்விரண்டில் ஒரு சிறப்பே உடையன பிறர் மலைகள். விரும்பிச் செல்லும் இரவலர் எமது எமது என்று கூறிவிட்டு உண்ண வளம் நிறைந்த உணவு மிகுந்து கிடக்கும்; அத்துடன், பகைவேந்தரை