பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

173


நீர்உலையாக ஏற்றி, மோரின்று, அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து, மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத், துவ்வாள் ஆகிய என்வெய்யோளும்; என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக், கானவர் 15

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை. ஐவனம் வித்தி, மையுறக் கவினி, ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக் கருவி வானம் தலைஇ யாங்கு, ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என், . 2O பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப - உயர்ந்து ஏந்துமருப்பின் கொல்களிறு பெறினும், தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்து, நீ இன்புற விடுதி யாயின், சிறிது குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண! - 25

அதற்பட அருளல் வேண்டுவல் - விறற்புகழ் வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல் நிற் பாடிய யானே.

குமணனே கூரிய வேலை உடையவனே! இசை மேம்பட்ட அண்ணலே! மூப்படைந்த என் தாயும், பிள்ளைகள் பிசைந்து உண்ண மெல்லுதலால் உலர்ந்த மார்புடன் மிக வருந்திக் கீரையின் இளந்தளிரை உப்பின்றி அவித்துத் தின்று, அழுக்கடைந்த கிழிந்த துணியுடன் விளங்கும் என் இல்லாளும் விரும்ப, யான் இவண் வந்தேன். கோடையால் வாடிக் கதிர்ஈனாத் தினைக்குப் பெய்யும் பெருமழை போல, வறியோர்க்கு வரையாது வழங்கிய நின் புகழை வாழ்த்துவேன். நின் முகம் மாறி, கொல்யானையே தரினும் யான் கொள்ளேன். மகிழ்வுடன், குன்றியளவு பொருளும் விரைந்து தந்தால் பெரிதாகவே கொள்வேன். நின்னைப் பாடிய யான் இன்புறுமாறு அருள்வாயாக என, நின்னை வேண்டுகின்றேன்.

சொற்பொருள்: 4. கண்துயின்று - கண் மறைந்து. 5.முன்றிற்போகா - முற்றத்திடைப் புறப்படமாட்டாத, 6. படர் - நினைவு. 12. அவிழ்பதம் - அவிழாகிய உணவை; சோற்றை. 13. குறைந்த குறைவான அறம் பழியா அறக் கடவுளைப் பழித்து. 16. கரிபுனம் மயங்கிய சுடப் பட்டுக் கரிந்த புனத்தை மயங்க. 17. மையுற இருட்சியுற, ஈனல் - ஈனுதல்.