பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

புறநானூறு - மூலமும் உரையும்



'அன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச் சென்று தலைவருந, அல்ல, அன்பின்று, 10

'வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு, இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர எனக் கண்பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து, அருந்துயர் உழக்கும்என் பெருந்துன்புறுவி நின் தாள்படு செல்வம் காண்டொறும் மருளப், 15

பனைமருள் தடக்கை யொடு முத்துப்பட முற்றிய உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு, ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில் படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, செலல்நசைஇ, உற்றனென் - விறல்மிகு குருசில்! 20

இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் - வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி! வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே, என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த நின் அளந்து அறிமதி, பெரு என்றும் 25 வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப் பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம் மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல, நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின் நின் தாள்நிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப, 30

வாள்.அமர் உயந்தநின் தானையும், சீர்மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.

மழை வறண்ட காலத்திலும் கங்கையிலே நீர் நிறைந்து உயிர்கட்கு உதவும். அதுபோல, எங்கட்குத் தலைமையாக உதவிக் காப்பவன் நீ! நின்னைக் கண்டு பரிசில்பெறக் கடத்தற்கு அரிய சுரமும் கடந்து வந்தேன். வறுமையால் பொறுத்தற்கு அரிய துயரங்கொண்ட என் மனைவி வியப்படையுமாறு செல்வம் பெற்று, அவள் காணப், பரிசில் பெற்ற யானைமீது அமர்ந்து போதலை யானும் விரும்புகின்றேன். வெற்றிமிக்க தலைவனே! என் வறுமை பின்நின்று துரத்த, நின் புகழ் முன்னாக ஈர்த்துக் கொண்டுவர, நின்னை நாடி வந்தேன். நின்னை வாழ்த்திய என் சொற்களை அன்புடன் கேட்பாயாக! என் அறிவின் ஆற்றலை அளந்து, எனக்கு உதவுக, பெருமானே! நின்னால் பெற்ற என் செல்வமிகுதியைக் கண்டு பிற அரசரும் நாணுமாறு நிமிர்ந்து செல்வேன். நின் படைவன்மையையும், நின் சிறந்த அருட்செல்வத்தையும் பலவாறு புகழ்ந்தும் செல்வேன்.