பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

7


வாள், வலந்தர, மறுப் பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன; கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; - - - தோல், துவைத்து அம்பின் துளைதோன்றுவ, - 5

நிலைக்கு ஓராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங்காட்டக்,

கறுழ்பொருத செவ்வாயான்,

எருத்து வவ்விய புலி போன்றன: - - களிறே, கதவு எறியாச், சிவந்து உராஅய், 10

நூதிமழுங்கிய வெண்கோட்டான், உயிர்உண்ணும் கூற்றுப்போன்றன; நீயே, அலங்குஉளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக்கடல் நிவந்தெழுதரும் - 15

செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ! அனையை ஆகன் மாறே, தாயில் துவாக் குழவி போல, ஒவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

- வாள் குருதிக்கறை படிந்து படிந்து செவ்வான நிறமாயிற்று. கால் வரிசையிட்டுப் போர்புரிவதால் களங்கொள்ள, வீரக்கழலின் அரும்பு வேலைப்பாடுகள் மறைந்து, அவை கொல்லேற்றுக் கொம்பு போல்வதாயின. அம்பு தைத்த கேடகத்தின் துளைகள், நிலையில் தப்பாத இலக்கம் போன்றன.இடசாரி, வலசாரி திருப்பக் கட்டிய முகக்கருவி உராய்ந்து உதிரம் சிந்திச் சிவந்த குதிரை வாய், உதிரங்குடித்த புலிவாயை ஒத்தது. மதிற்கதவுகளைக் குத்தி உடைத்து மழுங்கிய தந்தங்களோடு வரும் யானைகளோ கூற்றை ஒத்தன. நீ குதிரை பூட்டிய தேரில் அழகுடன் வருவாய்; அது செஞ்ஞாயிற்றின் உதயம் போன்றுள்ளது. அவ்வளவும் கண்டும் நின்னைப் பகைப்பார் யார்? அவ்வாறு பகைத்தவர் நாடு தாயில்லாக் குழந்தை பசியால் ஓயாது ஒழியாது கூப்பிடுவது போன்று, துயரமுற்றுப் புலம்பும் நாடாகும். (சென்னியின் படைப்பகுதிகளை வருணித்து, அவனது பேராற்றலைக் கூறவந்தவர், அவனை எதிர்த்தவர் நாட்டில் எழும் புலம்பலைக் கூறுகின்றார்) - -

விளக்கம்: கடல் அலைகள் குதிரைகளின் தலையாட்டத்

திற்கும், செஞ்ஞாயிறு சோழனது வெற்றியின் விளக்கத்திற்கும் எழுச்சிக்கும் உவமைகள். இனிப் போருக்குச் செல்வோர்