பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

புறநானூறு - மூலமும் உரையும்



163. தமிழ் உள்ளம்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோள்: புலவரின் மனைவி. திணை: பாடாண். துறை: பரிசில்.

(குமணன் அளித்த பரிசிலை இவ்வாறு செலவிடுக என்று கூறுகின்றார் புலவர். இது மனைக்கு மகிழ்ந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (புறத், சூ,36); அரசன் விடைகொடுப்பப் போந்தவன் கூற்றிற்குக் காட்டுவர் இளம்பூரணர் (தொல், புறத், 30)

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், பன்மாண் கற்பின்நின் கிளைமுதலோர்க்கும், கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும், இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, - 5 வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி - மனைகிழவோயே! பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே. என் மனைக்கு உரியவளே! நின்னை விரும்பும் மகளிர்க்கும், நீ விரும்பும் மகளிர்க்கும், நின் உறவினரில் கற்புடைய மூத்த மகளிர்க்கும். நம் குடும்பத்தின் பசிநீங்க நெடுநாளும் கடன்தந்து உதவியோர்களுக்கும், மற்றும் இன்னாரென்று கருதாதும், என்னோடுங் கேளாதும், வளமுடன் வாழலாமென்று பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள நினையாதும், முதிரமலைத் தலைவனான குமணன் நல்கிய இப் பெருஞ் செல்வத்தை, நீயும், அனைவருக்கும் வாரி வாரி வழங்குவாயாக.

சொற்பொருள்: 4. நெடுங்குறி எதிர்ப்பை - நெடுநாட்படக் குறித்த எதிர்ப்பைத் தந்தோர்க்கும் : குறி எதிர்ப்பை - யாம் இப்போது நல்கின் பிற்போது நமக்கு நல்குவார் என்று கருதி வழங்கும் கடனை. - - -

164. வளைத்தாயினும் கொள்வேன்! ダ

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன்: குமணன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை. குறிப்பு: தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு பாடியது. (பரிசில் விரும்பிப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ.30)