பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L[6ólyirã Gščis6¡I 179

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப், t பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழுஉம், தம் மகத்துமுகம் நோக்கி, 5

நீரெர்டு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, நிற்படர்ந் திசினே - நற்போர்க் குமண! என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென் - அடுக்கிய 10 பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ், மண்ணமை முழவின், வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந்தோயே. அடுப்பிலே காளான் பூத்துவிட்டது. பசியால் வருந்திய குழந்தை சுவைக்குந்தோறும் பால் காணாது அழ, அதன் முகத்தைப் பார்த்துக் கண்நீர் நிரம்ப நிற்பாள் என் மனைவி! அந்த வருத்தம் தீர உதவுபவன் நீயே என உணர்ந்து நின்பால் வந்தேன். போராற்றலையுடைய குமணனே கூத்தரது வறுமையைத் தீர்க்கும் நல்ல குடியிற் பிறந்தவன் நீ ஆதலால், எனது இத்தகைய வறுமைக்கண் நின்னை வளைத்தாயினும் பரிசில் கொள்ளாது யான் வறிதே போய்விடேன்!

சொற்பொருள்: 1. கோடு உயர் அடுப்பின் - புடை ஓங்கிய அடுப்பின்கண். 2. ஆம்பி - காளாம்பி, காளாம்பி - காளான். தேம்புபசி - உடம்பு மெலியும் பசி, 3. தோலொடு திரங்கி - தோல் ஆம் தன்மையுடனே திரங்கி. 4. இல்லி தூர்ந்த - துளை தூர்ந்த, 1. பச்சை நல்யாழ் - தோலாற் போர்க்கப்பட்ட நல்ல யாழையும்.12. வயிரியர் - கூத்தர்.

165. இழத்தலினும் இன்னாது!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன். குமணன். திணை: பாடாண். துறை: பரிசில் விடை குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித், தன் வாளைக் கொடுக்கப் பெற்றுப் புலவர் பாடியது.

(பரிசில் பெற்று விடைகொள்வான் பாடியது ஆகலின் பரிசில் விடை ஆயிற்று. வாகைத் திணைத் துறைகளுள் ஒன்றான, 'இடையில் வான் புகழ்க் கொடைக்கு இளம் பூரணர் காட்டுவர் (தொல், புறத். சூ. 17)