பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

புறநானூறு - மூலமும் உரையும்


பரப்பியும் வாழ்பவனே! நீ இமயம் போல் நிலை பெறுவாயாக!

நின் பரிசிலைப் பெற்ற யாமும், எம் ஊர் சென்று உண்டும் தின்றும்

ஊர்ந்தும் மகிழ்வு கொண்டாடச் செல்கின்றோம்.

167. ஒவ்வொருவரும் இனியர்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: சோழன் கடுமான் கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. .

(அரசனது வெற்றி மேம்பாட்டைப் பாடுகின்றார் புலவர். பழித்தது போலப் புகழ்ந்தது இது)

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், 5

ஊறுஅறியா மெய் யாக்கை யொடு’ கண்ணுக்கு இனியர், செவிக்கு இன்னாரே! அதனால், நீயும் ஒன்று இனியை, அவரும் ஒன்று இனியர், ஒவ்வா. யாவுள', மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! 10

நின்னை வியக்குமிவ் வுலகம், அஃது என்னோ? பெரும உரைத்திசின் எமக்கே.

1. நீயே, இகலவர்க் காணின் புறத்திரட்டு | 2. யாக்கை தன்னொடு *3 3. ஒல்லா

25

போர்ப் புண்பட்ட நீ கண்ணுக்கு இன்னாதவனாயினும், நின் போராற்றலால் கேட்பதற்கு இனியவனாவாய். நின் பகைவரோ நின்னைக் கண்டதும் புறங்காட்டி ஒடினவராதலால் கண்ணுக்கு இனியராயும், கேள்விக்கு இனியரல்லாராயு முள்ளனர். வீரக்கழல் புனைந்த கிள்ளியே! ஒன்றிலே நீயும் இனியை ஒன்றிலே நின் பகைவரும் இனியர் இருப்பினும், நின்னை மட்டும் இவ்வுலகம் மதிக்கின்றதே! அதற்கு யாது காரணம்? பெருமானே! எமக்கும் அதனைச் சொல்வாயாக. .

168. கேழல் உழுத புழுதி பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார். பாடப்பட்டோன்: பிட்டங் கொற்றன். திணை: பாடாண். துறை: பரிசில் துறை, இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.