பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

புறநானூறு - மூலமும் உரையும்


சொற்பொருள்: 1. நனந்தலை - அகன்ற விடத்து. 2. கறிவளர் அடுக்கத்து - மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலிடத்து. 10. கழா அது ஏற்றி - கழுவாதே - கழுவாதே உலைநீராக வார்த்து.1.உவித்த - சமைக்கப்பட்ட 12. கூதளம் கவினிய - கூதாளி கவின் பெற்ற: கூதாளி என்பது ஒருவகைச் செடி, தூதுளை எனவும் கூறுவர். குளவி முன்றில் - மலை மல்லிகை நாறும் முற்றத்து. 15. நறை நார்த் தொடுத்த-நறைக் கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட 19. நெளிய ஏத்தி வருந்தும்படி தாழ்த்தி,

169. தருக பெருமானே!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோன். பிட்டங்கொற்றன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை(பரிசில் வேட்டுப்பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க)

நூம்படை செல்லுங் காலை, அவர்படை எடுத்தெறி தானை முன்னரை எனாஅ; அவர்படை வருஉங்காலை, நும்படைக் கூழை தாங்கிய, அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனஅ; 5

அரிதால், பெரும நின் செவ்வி என்றும், பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை இன்னே விடுமதி பரிசில் வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் 10

பெருமரக் கம்பம் போலப் பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!

பெருமானே! நின் படை போர் மேற்செல்லுங் காலத்திலே முன்னே நிற்பவன் நீ.பகைவர் பெரும்படை பொங்கிவருங்காலத்து அணைபோலத் தடுத்து நிறுத்தும் மலைபோன்றவனும் நீ! நின்னைக் காணுவதோ எந்நாளும் அரிது; என் வறுமையோ பெரிது. இப்போதே பரிசில் தந்து என்னை அனுப்பி வைப்பாயாக இளங்கோசர் படைக்கலம் கற்கும் காலத்தே வேலெறிந்து பழகும் முருக்கமரத் தூணமாகிய இலக்கைப் போல, பகைவர் வெல்லுவதற்கு அரிய நின் வெற்றியும் என்றும் நிலைபெற்று வாழ்வதாக! -

சொற்பொருள்: 4 கூழை - பின்னணிப்படை5.குன்று விலங்கு சிறையின் - குறுக்காகத் தடுத்து நிற்கும் மலைபோல.