பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

புறநானூறு - மூலமும் உரையும்



171. வாழ்க திருவடிகள்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோன்: பிட்டங் கொற்றன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு : “ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம். --

(தலைவனது இயல்புமேம்பாட்டை வியந்து பாடினதால் இயன்மொழி ஆயிற்று; இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து என்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ. 35)

இன்று செலினுந் தருமே, சிறுவரை நின்று செலினும் தருமே; பின்னும், 'முன்னே தந்தனென் என்னாது, துன்னி வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்; 5

தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்; இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும், அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை 10

பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே, முள்ளும் நோவ உறாற்க தில்ல! அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி ஈவோர் அரியஇவ் உலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! 15

இன்று சென்றாலும், சில நாள் கழித்துச் சென்றாலும் நாடோறும் சென்றாலும், “முன்னே தந்தேனே' என்னாது, என்றும் என் உண்கலத்தை நிரப்புவோன். திருந்திய வேலினை உடைய கொற்றன். தான் விரும்பியதைப் போலவே, தன் அரசன் மகிழுமாறு போர் நடத்தி வெற்றியும் பெறுபவன். நல்ல பசுக்களைத் தொழுவோடே வேண்டினாலும், பெறுதற்கரிய அணிகலன்களைக் களிற்றோடு பெற வேண்டினாலும், அங்ங்னமே தரும் பெருந்தகையாளன் அவன். அதனால், எம் இறைவனது காலடியில் சிறுமுள்ளும் நோவு செய்யாது ஒழிவதாக! கொடுப்பவர் அரிதான இவ்வுலகத்திலே, இரவலர் உயிர் வாழுமாறு அவன் திருவடிகள் என்றும் என்றும் நிலை பெற்று வாழ்வதாக!

சொற்பொருள்: 9. களம் மலிநெல்லின் குப்பை களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையை, -