பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

189


பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்: மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன். திணை: வாகை. துறை: அரச வாகை.

(தலைவனது போர் வென்றியையும், கொடைவென் றியையும் பாடுகின்றார் புலவர். அதனால் அரசவாகை ஆயிற்று.)

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச், சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, 5

அரசிழந்து இருந்த அல்லற் காலை, முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது இரங்கு புனல் நெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப், பொய்யா நாவிற் கபிலன் பாடிய, 10 மையணி நெடுவரை ஆங்கண், ஒய்யெனச் செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை, அருவழி இருந்த பெருவிறல் வளவன், மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை 15

புதுமையின் நிறுத்த புகழ்மேம்படுந! விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப்பூண், சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன் ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணி இயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், 20

ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலந் தீர, நீதோன்றினையே - நிரைத்தார் அண்ணல் கல்கண் பொடியக், கானம் வெம்ப, மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், 25

கோடை நீடிய பைதறு காலை, இருநிலம் நெளிய ஈண்டி, உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

அசுரர் மறைத்த ஞாயிற்றை மீட்டுவந்து, கண்ணன் உலக இருள் நீக்கினான் என்பர். அதுபோலச் சோழவளநாடும் பகைவர்'