பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

புறநானூறு - மூலமும் உரையும்


கைப்பட்டுமக்கள் துயரடைய, முள்ளுர்மலையிலே திங்கட்குடை உயர்த்துப், பகைவரை வென்று வெருட்டி அழித்துச் சோழ நாட்டைக் காத்த, நிலைபெற்ற புகழால் மேம்பட்ட பெருமானே! நின் தந்தை, கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து, அறங்காத்த பெருவலியுடையவனாயிருந்து இறந்தனன். நன்னெறி கொன்ற நாற்புறமும் இருப்பார் வந்து சூழக் கவலையுற்ற மனவருத்தம் தீருமாறு நீ வந்து தோன்றினாய். இணைந்த மாலை அணிந்த தலைவனே! மலையிடம் பொடிய, காடு தீமிக, இவ்வாறாக எங்கும் வெம்மை நிறைந்த கோடைக் காலத்தில், பெருமழை சொரிந்தாற் போல, நீயும் வந்து உலகிடத்து உதவுவதற்கெனத் தோன்றினாயே!

175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார். பாடப்பட்டோன்: ஆதனுங்கன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(அறத்துறை பேணும் தலைவனது இயல்பு மேம்பாட்டை வியந்து பாடுகின்றார் புலவர். மோரியர்* அமைத்த பெருவழி பற்றிய செய்தியும் இச் செய்யுளால் அறியப்படும்) .

எந்தை! வாழி, ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே! நின்யான் மறப்பின், மறக்குங் காலை, என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல் 5 .

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த - உலக இடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும் பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே. 10 (* மோரியர் - வடநாட்டுப் பாடலிபுத்திரத்திலிருந்து ஆண்ட மெளரிய மன்னர்கள்.)

யான் யாதாவது சொல்ல நினைத்தால் நின் புகழையே பேசுவேன், என் நெஞ்சில் நின்னையே அனைவரும் காண்பர். என் சாவிலும், என்னை யானே மறக்கும் காலம் உண்டாயின் அப்பொழுதுமே, நின்னை மறப்பேன். ஞாயிற்று மண்டிலத்தை ஒப்ப, யாவரையும் காத்தலே கடமையாகக் கொண்ட நின்னை, அவ்வாறன்றி யான் என்றுமே மறவேன். ஆதலால், எம் இறைவனே! ஆதனுங்கனே! நீ நிலைத்த புகழோடும் நீடு

வாழ்வாயாக!