பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

193


வேட்டையாடித் தந்த எய்ப்பன்றித் தசையுடன், செவ்விய சோறும் கலந்த கட்டியை, வருவார்க் கெல்லாம் ஒப்ப வழங்குபவன் அவன். அதனைப் பனங்குடையிலே பெற்று உண்டு மகிழ்பவர் இரவலர். வைகறையிற் காணும் அவனுடைய கொடைக் காட்சி பிற வேந்தரைப் பலநாள் பாடிக் காத்திருந்து பெறுகின்ற யானைக் கொடையினும் சிறந்ததாகும்.

சொற்பொருள்: 1. ஒளிறு வாள் - விளங்கிய வாளையுடைய. நெடுநகர் - உயர்ந்த கோயிற்கண். 2. கண்வெளிறு போக - கண்ணொளி கெட திரங்கி - நின்று உலர்ந்த 5. எந்திரப் படுபுழை பொறிகளைப் பொருந்திய இட்டிவாயில் 10, மட்டு அறல் நல்யாற்று எக்கர் ஏறி - கரை மரத்துப் பைந்தேன் அரித்தொழுகு கின்ற நல்ல கான்யாற்றினது மணற்குன்றின் கண்ணே ஏறி.

178. இன்சாயலன் ஏமமாவான்!

. பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன். பாண்டியன் கீரஞ்சாத்தன், பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை. -

('நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும், பின் அதனைக் கைவிட்டு அஞ்சி ஒடுதலாற் சிறுமையும் அடைந்தனர் இவன் பகைவர் என, இவனது வல்லாண்மையை உரைக்கின்றார் புலவர்)

கந்துமுணிந்து உயிர்க்கும் யானையொடு, பணைமுனிந்து, கால்இயற் புரவி ஆலும் ஆங்கண், மணல்மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணார் ஆயினும், தன்னொடு குளுற்று உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்; ‘5

ஈண்டோர் இன்சாயலனே; வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின், கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபேராளர்

அஞ்சி நீங்கும் காலை, 1 O ஏமமாகத் தான்முந் துறுமே.

கட்டியிருந்த குதிரைகளும் யானைகளும் அதனை வெறுத்து ஆரவாரிக்கும் அவன் அரண்மனை முற்றத்தில், சான்றோர் புகுவர். அவ் வேளையில்ே, அவர் உண்ணார் எனினும், தன்னுடனே சார்த்திச் சூளுரைத்து, 'உண்க வென இரந்து வேண்டும் புகழாளன் சாத்தன். இரவலரான எம் போல்வார்க்கு இனியவன் அவன். கள்ளுண்ட கலத்தினரான சிலர், வெறியால் வீரம்