பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

புறநானூறு - மூலமும் உரையும்


பேசினவர், போர் வந்தபோது அஞ்சிப் புறங்காட்டி ஒட, அவர்க்கும் அரணாகத் தான் தன் ஆற்றலால் முன்னின்று, அவரையும் காத்துப் பகைவரை வெற்றி கொண்ட ஆண்மையனும் அவன்!

சொற்பொருள்: 1. பணைமுனிந்து கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் - பந்தியை வெறுத்துக் காற்றுப் போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து. ஆலிக்கும்-ஒலிக்கும்.3.மணல் மலி முற்றும் - இடு மணல் மிக்க முற்றத்தின்கண். 6. வேண்டார் எறிபடை மயங்கிய - பகைவர் எறியும் படைக்கலம் தம்மிற்கலந்த, 1. ஏமமாக அவர்க்கு அரணாக, தான் முந்துறும் - தாள் வளியால் முந்துற்று நிற்பன். நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும், பின் அதனை மறத்தலால் சிறுமையு முடைமையின், சிறுபேராளர் என்றார்.

179. பருந்து பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம். பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

("பருந்து பசி தீர்க்கும் வேலினை ஏந்தியோன் என, இவனது வல்லாண்மையைப் பாடுகின்றார் புலவர். ஆண்தகை உள்ளத்து நாகன்' என்னும் சொற்கள் செறிவு உடையன.)

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்தஎன் இரவர் மண்டை மலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், 5

படைவேண்டுவழி வாள் உதவியும், வினைவேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுபவேண்டுபவேந்தன் தேளத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்லிசை, நாலை கிழவன், 1O பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர், பலரே. 'இவ்வுலகிலே வரையாது வழங்கும் வண்மையோர் மாய்ந்தனர். இனி எமக்கு உதவுவார் யாவரோ? எனக் கேட்டேம். அப்பொழுது, "பகைவரை வெற்றிகொண்டு, முரசும் அவர் நாடும் பல கொண்ட பாண்டியர் படைத் தலைவன்; பாண்டியர்க்குப்