உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

புறநானூறு - மூலமும் உரையும்


இரந்தபோது, எம் வாடிய உண்ணாத மருங்கினைக் காட்டிக் கொல்லனை நெடு வேலை விரைந்து வடிப்பாயாக’ என்று ஆணையிட்டவன் அவன். நாள்தோறும் கொடுக்கப் பெருஞ் செல்வம் உள்ளானும் அல்லன். எனினும், இல்லை என உரைக்கும் புன்மையும் அவனிடமில்லை. போர்ப்புண்பட்ட வடுக்கள் அவன் உடல் முழுதும் பரந்து, மருந்துக்காகக் கொள்ளப் பட்ட மரத்தின்புறம்போலத் தோன்றும்.பல போராற்றித்தன்நாடு பேணிய ஆற்றலுடையவன் அவன். அவ் வடுக்கள் வசையாக நில்லாது, பொலிவுடன் அவன் தறுகண்மையைக் காட்டி இசையாகவே தோன்றும் மிகச்சிறந்த வள்ளமை யுடையவனும் அவன்.

சொற்பொருள்: 3. இறையுறு விழுமம் தாங்கி - தன் பேரரசனுக்கு வந்து உற்ற போரான் அமைந்த தொல்லைகளைத் தான் பொறுத்து. 4. இரும்பு சுவைக் கொண்ட சிறந்த புண்ணாகிய நோய் தீர்ந்து - அதாவது போரிற்பட்ட புண்கள் ஆறி.

181. இன்னே சென்மதி!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

('பசிப்பகையாகிய பரிசிலைப் பெறுதற்கு இன்னே செல்வாயாக’ எனக் கூறுதலால், பாணாற்றுப்படைத் துறையும் ஆம். பண்ணனின் வல்லாண்மை கூறலின் வல்லாண் முல்லைத் துறை ஆயிற்று) -

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில், கருங்கண் எயிற்றி காதல் மகனொடு, கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப், புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை, 5

வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன், உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின், இன்னே சென்மதி, நீயே, சென்று அவன் பகைப்புலம் படரா அளவை, நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே! 1 O

ஊர்மன்றத்து விளாமரத்தின் பழம் ஒன்று மனையிடத்திலே வீழ்ந்தால், அதனை மறத்தியர் மகனான சிறுவனும் காட்டு யானைச் சிறுகன்றும் ஒன்றாக வந்து எடுக்கும், அத்தகைய அரண் சூழ்ந்த வன்னிலத்திலே அமைந்தது, புலால் நாறும் அம்பினையும்