பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

9


நீங்காத துயரத்திலே கிடந்து உழல்வர். அத்தகையாரோடு சேராதிருப்பாயாக பெற்ற தாய் குழந்தையைப் பேணுவதுபோல் நின் நாட்டைப் பேணிக் காத்து வருவாயாக நாட்டு அரசனாவது எளிதில் வாய்ப்பதன்று. எனவே, அருளோடு காவல் நடாத்துக! (அரசின் அருமையையும் அரசன் அருளுடையவனாகவே விளங்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறுவது இது) -

சொற்பொருள்: 2. ஆனின் - பசுக்கூட்டம் போல. முன்பு - வலிமை. 3 - 4. நீயோ, நீயோர் - இவற்றிலுள்ள ஒ, ஓர் அசைகள்: "நீயோ ஒகாரம் வினாவுமாம். 5. அருள் - தொடர்பு இல்லாதார் மாட்டுத் தோன்றும் இரக்கம். அன்பு - தொடர்பு உடையார் மாட்டுத் தோன்றும் மன நெகிழ்ச்சி. 6. நிரயம் - நரகம். 7. மதி: முன்னிலையசை, 8. பெறல் அருங்குரைத்து - பெறுதற்கு அரியது. குரை : அசை, -

6. தண்ணிலவும் வெங்கதிரும் பாடியவர்: காரிகிழார். பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி திணை: பாடாண். துறை:

செவியறிவுறுஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு: பாண்டியனின் மற மாண்பு.

(இவ்வாறு செய்க என அரசியல் கூறுதலால், செவியறி வுறுஉம், 'மதியமும் ஞாயிறும் போல மன்னுக’ என்றதனால் வாழ்த்தியலும் ஆயிற்று. இதனுள் இயல்பாகிய குணம் கூறி, அவற்றோடு செவியுறையும் கூறினர், செவியுறைப் பொருள் சிறப்புடைத்து என்று கருதி, அவன் வாழ்தல் 0வேண்டும் என்பதற்காக, (தொல், புறத். சூ 35 நச்)

வாடஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணா.அது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும், கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 5 நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை உலகத் தானும், ஆனாது, உருவும் புகழும் ஆகி, விரிசீர்த் தெரிகோல் ளுமன்ன் போல, ஒரு திறம் - பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! 10 செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்பமண்டி, அடர் புகர்ச் - .יי : . சிறுகண் யானை செவ்விதின் ஏவிப், - -