பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lయuత&&త - 2O5.

அதன்எறிந் தன்ன நெடுவெண் களரின்

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,

ஓடி உய்தலும் கூடும்மன்,

ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (* ஆயினம் - புறத்திரட்டு)

புடைத்து வைத்த தோல்போலத் தோற்றமளிக்கும் களர் நிலமேனும், தனியாக நிற்கும் ஒரு மான் வேடனைத் தப்பிப் பிழைத்து ஒடுவதுபோல, யானும் நலமுடன் கவலையின்றி வாழ்ந்திருப்பேன். ஆனால், சுற்றத்தோடு கூடி வாழும் இல் வாழ்க்கையோ, என்னை ஒடவும் விடாமல் உய்யவும் விடாமல் காலைத் தளையிட்டு நிறுத்தி விடுகின்றதே!

194. முழவின் பாணி!

பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார். திணை: பொதுவியல். துறை: பெருங்காஞ்சி..

நிலையாமையைக் கருதிச் சொல்லுதல் பொருளாக விளங்கலின், பெருஞ்காஞ்சி ஆயிற்று. இதன் இயல்பு உணர்ந்தோர் இனியதாகச் செய்து கொள்' என உரைப்பது, அவர் வீட்டின்பத்திற்கு ஆவனவாய நெறிகளை மேற்கொள்க என்பது ஆம்) -

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,

புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்

பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்,

படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன் 5

இன்னாது அம்ம, இவ் வுலகம், இனிய காண்க, இதன் இயல்புணந் தோரே.

இவ் வுலகமே மிகவும் இன்னாதது. அம்மம்ம! ஒரு வீட்டிலே ஓர் உயிர் பிரிந்து செல்லச் சாப்பறை ஒலிக்கின்றது; இன்னொரு வீட்டிலோ இனவளர்ச்சிக்குக் கால்கோளான மணவாழ்வில் ஈடுபடுத்தும் மங்கல முழவோசை முழங்க மணந்த மகளிர் பூவணிகின்றனர்; மற்றோரில்லிலோ கணவரைப் பிரிந்த மகளிர் கண்ணிர் சோரக் கலங்குகின்றனர். இவ்வாறு மகிழ்வும் துயரமும் ஒருசேரப் படைத்து விட்டனன் பண்பிலாளனான படைப்பவன். எனவே, இவ்வியல்பு உணர்ந்த யாவரும், இன்னாதனவற்றை சிந்தனையினின்றும் ஒதுக்கி, இனியவற்றை மட்டுமே கண்டு மகிழ்வாராகுக! -