பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

புறநானூறு - மூலமும் உரையும்


195. எல்லாரும் உவப்பது!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. .

("நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லோரும் உவப்பது; அன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியும் அதுவே என உரைத்தலால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. காஞ்சித் திணைத் துறைகளுள் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமைக்கு' இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ.19)

பல்சான் lரே! பல்சான் lரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின் பல்சான் lரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ, 5 நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும், நல்லாற்றுப் படுஉம் நெறியுமார் அதுவே.

அமைந்த குணங்கள் பலவும் உடையீர்! மீன்முள் போன்ற நடைமுதிர்ந்த கன்னங்களையும் உடையீர்! பயனற்று முதிரும் மூப்பினையும் உடையீர்! கடுந்திறலுடன் மழுப்படையோடு வரும் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லுங்காலத்தே நீர் நும் நிலைக்கு இறங்குவீர்! நல்வினைகள் செய்யமாட்டீராயினும் தீவினைகளையாவது செய்யாது விலக்குங்கள். நும்மை யாவரும் புகழ்வதற்கும், நும்மை நல்வழியிலே செலுத்தி உய்யுமாறு செய்வதற்கும், அதுவே ஏற்ற வழியாகும்.

196. குறுமகள் உள்ளிச் செல்வம்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(பாடாண் திணைத் துறைகளுள் ‘கொடார்ப் பழித்த'ற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர். அதுவே பொருத்தம் ஆகும் (தொல், புறத். சூ. 29)

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே,