பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

புறநானூறு - மூலமும் உரையும்


கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ. உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு 5

செருமேம்படுஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே! எம்மால் வியக்கப் படுஉ மோரே - இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த 10

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, புண்புல வரகின் சொன்றியொடு, பெறுஉம்,

சீறுர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே, மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் 15

'உயர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்; நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே'

பெருமானே! நாற்படை வளமும் செல்வமும் மிகுந்த பேரரசர் எனினும், எங்களை மதியாத அவரை யாமும் மதிப்பதில்லை. வரகஞ்சோறு தந்து எமக்கு ஊட்டும் சிற்றுரர் வேந்தராயினும், அவர் எம்மிடத்துச் செய்யும் முறைமையை அறிந்து நடக்கும் குணமுடையவர் ஆயின், அவரையே யாம் பாராட்டுவோம்.அறிவிலார் செல்வம் இரவலர்க்குப் பயன்படாது. ஆதலால், எவ்வளவு வறுமையுற்றாலும் அதனை நினையோம். அதனினும், நல்லறிவுடையோர் வறுமையுறின் அவரையே பெரிதாக எண்ணி, அவர் வாழ யாமும் வாழ்த்துவோம்.

198. மறவாது ஈமே!

பாடியவர்: வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். பாடப் பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

('மாற மறவாது ஈமே எனப் பரிசில் வேட்டுப் பாடுகின்றனர். 'பெருங்கடல் நீரினும், அக்கடன் மணலினும், வானத்து உறையினும், புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி நீடு வாழிய எனவும் வாழ்த்துகின்றனர்)

"அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக், கடவுள் சான்ற, கற்பின் சேயிழை