பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

209


மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிக!" என்று ஏத்தித், 5 திண்தேர் அண்ணல் நிற்பாராட்டிக், காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, ஆல்அமர் கடவுள்அன்னநின் செல்வம், - . வேல்கெழு குருசில் கண்டேன்; ஆதலின், 10 விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த தண்டமிழ் வரைப்பு.அகம் கொண்டியாகப், பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல் நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும், ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும் 15

பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின் முன்னோர் போல்க, இவர் பெருங்கண்ணோட்டம் யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப் பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும், நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும், 20

இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி, நீடு வாழிய! நெடுந்தகை யானும் கேளில் சேஎய் நாட்டின், எந்நாளும்,

துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் 25 அடிநிழல் பழகிய வடியுறை, கடுமான் மாற மறவா தீமே.

தேர்வேந்தனே கனவிலும் நின் புகழையே பிதற்றிப் பரிசில் பெறும் அன்பினால் வந்தவன் யான் நின் புதல்வரையும் வாழ்த்தி, ஆலமர் செல்வன் போன்ற நின் திரண்ட செல்வத்தையுங் கண்டேன்; போய் வருகின்றேன். நின் கண்ணி வாழ்க! தமிழக மனைத்தையும் பகைவரை யழித்துக் கொள்ளைகொண்டு வரும் வலியுடையவர் நின் மைந்தர். பிறர் செல்வம் எல்லாம் பற்றிக் கொணர்ந்த நின் முன்னோர் போன்ற கண்ணோட்டம் உடையவரே இவரும். கடல் மணலினும் மிகுந்த நாள், இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந்தோறும், செல்வமும் புகழும் பெற்று நீ இனிதாக வாழ்க! பெருந்தகையே! உறவற்ற வேற்று நாட்டிலே மழைத்துளி விரும்பிய வானம்பாடிபோல நின் வள்ளன்மைக்கு விரும்பி வந்தேன். நின் பால் பழகிய அடிப்படையை மனங்கொண்டு வாழ்வேன். மாறனே! எனக்கும் தகுந்த பரிசில்களை நீயும் வழங்கி விடுப்பாயாக பெருமானே!