பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

புறநானூறு - மூலமும் உரையும்



நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்; தாரணி யானைச் சேட்டிருங் கோவே! ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! 15

யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல் பொன்படும்ால்வரைக் கிழவ! வென்வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடல்அருங் குரைய நாடுகிழவோயே! - 20 'ஊர் அனைத்தும் இரவலர்க்கு வழங்கி உயர்ந்தவன்; அணியோடும் தான் ஊர்ந்து வந்த தேரையும் முல்லைக்கு வழங்கியவன்; தொலையாத நற்புகழும் களிற்றுப் படையும் உடையவன், பறம்பிற் கோமான். அப் பாரியின் மகளிர் இவர். யானோ அந்தணன், புலவன். இவரை அழைத்து வந்தேன். இவர் தந்தையின் தோழன் யான்; ஆதலின், இவர்களும் என் மகளிரே ஆவர்.

நாற்பத்தொன்பது தலைமுறைகள் துவரையை ஆண்ட போர்மறமும் கொடையும் மிகுந்த வேளிர்களுள் ஒருவனே! வெல்போர்த் தலைவனே! பெரிய இருங்கோவேளே! பாணர்க்கு உதவும் கடப்பாட்டினை உயர்ந்து உதவும் புலிகடிமாலே! வலியுடைய பொன்விளையும் மலைக்கு உரியவனே! வெற்றிவேற் படைஞர்மிக்க பகைவரஞ்சும் கேடற்ற நாட்டவனே கேள்: இவரை நினக்கு மணமுடித்துத் தருவேன்; மணந்து கொண்டு சிறப்புடன் வாழ்வாயாக.

சொற்பொருள்: 3. தேருடன் முல்லைக்கு ஈத்த - தேரை ஏறுதற்கு ஏற்பச் சமைத்த அணியோடும் முல்லைக்கு வழங்கிய 9. வடபால் முனிவன் தடவினுள் தோன்றி - வடபக்கத்து முனிவருடைய ஓம குண்டத்தின்கண் தோன்றி. (இவனைச் சம்பு முனிவன் என்பர்)

202. கைவண் பாரி மகளிர்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் : இருங்கோவேள். திணை: பாடாண். துறை:பரிசில் குறிப்பு:இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடிய செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,

கட்சி காணாக் கடமா நல்லேறு